இராணவானா பூனைப்பாம்பு
இராணவானா பூனைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ. இராணவானே
|
இருசொற் பெயரீடு | |
போயிகா இராணவானே சமரவிக்ராமா மற்றும் பலர், 2005 | |
இராணவானா பூனைப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் போயிகா இராணவானே (Boiga ranawanei) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினமானது இலங்கை பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி.[2] இராணவானா பூனைப்பாம்பு நடுத்தர அளவிலானது. இப்பாம்பின் நீளம் மூக்குப் பகுதியிலிருந்து குதம் வரை அதிக பட்சமாக ஆண் பாம்பில் 1105 மிமீ நீளமும் பெண் பாம்பில் 899 மிமீ வரை இருக்கும். பக்கவாட்டாகத் தட்டையான உடலைக் கொண்டுள்ளது. செதில்கள் மென்மையாகவும் வயிற்றுக் கவசங்கள் வெளிப்படையான அடையாளங்கள் இல்லாமல் காணப்படும். முதுகு மற்றும் தலையின் நிறம் மஞ்சள்-பழுப்பாகவும், பரந்த குறுக்கு அடர் பகுதியினைக் கொண்டுள்ளது. கீழ்ப் பக்கத்தில் இணைக்கப்படாத பழுப்பு நிறப் பட்டைகள் காணப்படும். வயிற்றுப் பகுதி வெளிர் மஞ்சள் நிறமானது. முதுகுப்புறத்தை விட இலகுவானது. முகப் பகுதியில் அடையாளங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது. வாலின் நிறம் உடலின் நிறத்தினை ஒத்துள்ளது.[3]
இந்தப் பூனைப்பாம்பின் சிற்றினப் பெயரான போ. இராணவானே தற்போது இலங்கையில் வனவிலங்கு சூழல் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கே. பி. இராணவானாவை கௌரவிக்கும் வகையில் இடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Samarawickrama, P. (2007). "Boiga ranawanei". IUCN Red List of Threatened Species 2007: e.T63657A12703783. https://www.iucnredlist.org/species/63657/12703783. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Boiga ranawanei at the Reptarium.cz Reptile Database. Accessed 8 Dec 2014.
- ↑ Samarawickrama, Pradeep & Samarawickrama, V. & Wijesena, N. & Orlov, Nikolai. (2005). ANEW SPECIES OF GENUS Boiga (SERPENTES: COLUBRIDAE: COLUBRINAE) FROM SRI LANKA. Russian Journal of Herpetology. Vol. 12, No. 3, 2005, pp. 213 – 222.