இராணிபுரம்

கேரளத்தின் காசர்கோடு மாவட்டதில் உள்ள மலைவாசத்தலம்

இராணிபுரம் (இதன் பழைய பெயரான மடத்து மலை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தின், காசர்கோடு மாவட்டத்தில், வெள்ளரிக்குண்டு வட்டத்தில் உள்ள ஒரு மலைப்பிரதேசமும் சுற்றுலா தலமும் ஆகும். இராணிபுரம் மலைச்சிகரமானது கடல் மட்டத்திலிருந்து 1022மீ உயரத்தில் உள்ளது [1]. அருகாமையில் உள்ள காஞ்ஞங்காடு நகரிலிலுந்து 48 கிமீ தொலைவிலும் மங்களூரில் இருந்து 107 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2] இது கேரளாவின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. கொட்டன்சேரி-தலைக்காவேரி மலைத்தொடரின் அருகில் இராணிபுரம் உள்ளது. இது காசர்கோட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பாதுகாக்கப்பட்ட இடகாகும். 1970வரை இராணிபுரம், மடத்துமலை என அழைக்கப்பட்டது.

இராணிபுரம் சிகரம்

புவியியல் தொகு

புல்நிலங்கல், சோலைக்காடுகள்மற்றும் இலைஉதிரா காடுகளில் உள்ள தாவரங்கள் இராணிபுரத்தில் காணப்படுகின்றன. இது பகமண்டலா மற்றும் குடகு வனப்பகுதிக்கு அருகே உள்ளது. இது மலையேற்றதிற்கான சிறந்த இடமாகும். பனி சூழ்ந்த இராணிபுரச் சிகரம் உற்சகமான அனுபவத்தையும் இனிமையான நினைவுகளையும் அளிக்கிறது. கன்னுர், காசர்கோட், தலைக்காவேரி, மடிகேரி மற்றும் விராஜபேட் ஆகியவை அருகே அமைந்துள்ளது.

இது கேரளாவின் இராணிபுரம் வனவிலங்கு சரணாலயம் உள்ளே அமைந்துள்ளது. இராணிபுரச் சிகரம் தான் சரணாலயதிதில் உள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இது கர்னாடகத்தில் உள்ள தலைக்காவேரி வனவிலங்கு சரணாலயத்துடன் இனைகிறது. பனத்தடி மிக அருகில் உள்ள நகரமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. www.altitude.nu
  2. Reporter, Staff; Reporter, Staff (2011-12-18). "Ranipuram tourism project inaugurated" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/ranipuram-tourism-project-inaugurated/article2725608.ece. பார்த்த நாள்: 2017-12-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணிபுரம்&oldid=3028043" இலிருந்து மீள்விக்கப்பட்டது