இராணியின் உலோகம்

இராணியின் உலோகம் (Queen's Metal) என்பது ஒரு கலப்புலோகம் ஆகும். இந்த கலப்புலோகத்தில் ஒன்பது பங்கு வெள்ளீயத்தாலும் மற்றும் உள்ள ஒரு பங்கு அந்திமனி, ஈயம், மற்றும் பிசுமத் ஆகியவற்றால் ஆனது. இதன் கடினத்தன்மையானது பியூட்டர் மற்றும் பிரித்தானிய உலோகம் இவற்றுக்கு இடைப்பட்டதாக உள்ளது. இந்த கலப்புலோகம் 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய பியூற்றர் கொல்லர்களால் உருவாக்கப்பட்டதாகும்; தொடக்கத்தில் இந்த கலப்புலோகத்தின் இயைபு மிகவும் இரகசியமானதாக இருந்தது. இக்கலப்புலோகத்தால் பொருள்கள் வின்சர் மாளிகையின் பயன்பாட்டிற்காக மட்டுமே செய்யப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணியின்_உலோகம்&oldid=3354322" இலிருந்து மீள்விக்கப்பட்டது