இராணி (நடிகை )
இராணி ( பஞ்சாபி, உருது: رانی ) (ஆங்கிலம் Rani) (டிசம்பர் 8, 1946 - மே 27, 1993) இவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1960 களின் பிற்பகுதியில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான வாகீத் முராததுடன் வெற்றிகரமான ஜோடியாக நடித்து அவர் பெரிய வெற்றியைப் பெற்றார். அவர் துணைக் கண்டத்தின் மிக வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருந்தார், மேலும் திரைப்படங்களில் அவரது நடன நிகழ்ச்சிகளுக்காகவும் பிரபலமானார். ராணி புற்றுநோயால் மே 27, 1993 அன்று இறந்தார்.
Rani رانی | |
---|---|
பிறப்பு | நசிரா திசம்பர் 8, 1946 லாகூர், பஞ்சாப் (இந்தியா), இந்தியா |
இறப்பு | மே 27, 1993 கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் | (அகவை 46)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1962–1991 |
வாழ்க்கைத் துணை | ஹசன் தாரிக் கமர் சர்பிராஸ் நவாஸ் |
நடிப்பு வாழ்க்கை
தொகுஇராணி உருது மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தார் மற்றும் பாகிஸ்தான் படங்களில் ஒரு திரைப்பட கதாநாயகியாகவும் திகழ்ந்தார். மெஹூப் ராணி மௌஜ் மைலா, ஏக் தேரா சஹாரா மற்றும் சஃபைத் கூன் போன்ற படங்களில் துணை வேடங்களில் தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகு 1962 ஆம் ஆண்டில் 1950 கள் மற்றும் 1960 களின் மூத்த திரைப்பட இயக்குனரான அன்வர் கமல் பாஷா, மெஹபூப் (1962 திரைப்படம்) படத்தில் இராணிக்கு முதல் பாத்திரத்தை வழங்கினார்.[1] 1965 வரை அவர் மற்ற படங்களில் நடித்தார், ஆனால் அவை தோல்வியடைந்தபோது அவர் ஒரு துரதிர்ஷ்ட நடிகை என்று அழைக்கப்பட்டார்.
இருப்பினும், ஹஸார் தஸ்தான் மற்றும் தீவார் பாபி ஆகியப் படங்களின் வெற்றிக்குப் பிறகு, இராணி ஒரு முன்னணி நடிகையானார். சான் மக்னா, சஜ்ஜன் பியாரா, ஜிந்த் ஜான், துனியா மாட்லிப் டி, அஞ்சுமான் (1970 திரைப்படம்), தெஹ்ஸீப் (1971 திரைப்படம்), உம்ராவ் ஜான் அடா (1972), நாக் முனி, சீதா மரியம் மார்கரெட், இக் குணா அவுர் சாஹி மற்றும் சுர்ரயா போபாலி போன்ற படங்கள். 1990 களின் முற்பகுதியில் கோவாஹிஷ் மற்றும் ஃபராப் ஆகிய இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇராணி 1946 டிசம்பர்8 அன்று பசாசிரா என்ற இயற்பெயருடன் லாகூரின் மொசாங் என்ற இடத்தில் ஒரு அரயன் குடும்பத்தில் மாலிக் முகம்மது ஷஃபி மற்றும் இக்பால் பேகம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] அவரது தந்தை, பாடகர் மற்றும் நன்கு அறியப்பட்ட உருது நாடக கலைஞரான ஆகா ஹஷர் காஷ்மீரியின் மனைவி முக்தர் பேகத்தின் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தார். முக்தர் பேகம் இராணியை தனது வீட்டிலேயே வளர்த்தார். பிறகு, முக்தார் பேகத்துடன் சமரசம் செய்து கொண்டு இராணி தனது தாயுடன் சென்று சேர்ந்தார். 1960 களின் பிற்பகுதியில் தனது ஆரம்ப வெற்றிக்குப் பின்னர், அவர் புகழ்பெற்ற இயக்குநர் ஹசன் தாரிக்கை மணந்தார், அவருக்கு ரபியா என்ற மகள் இருந்தாள். இருவருக்குமான கருத்து மோதல்கள் காரணமாக, ஹசன் தாரிக் 1970 களின் பிற்பகுதியில் இராணியை விவாகரத்து செய்தார். பின்னர் அவர் திரைப்பட தயாரிப்பாளர் மியான் ஜாவேத் கமர் என்பவரை மணந்தார், இராணிக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது அவரும் விவாகரத்து செய்தார். லண்டனில் சிகிச்சையின் போது, பிரபல துடுப்பாட்ட வீரர் சர்பராஸ் நவாஸை சந்தித்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உறவை வளர்த்துக் கொண்டு விரைவில் திருமணம் செய்து கொண்டனர். 1980 களின் பிற்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இராணி சர்ப்ராஸுக்கு உதவினார். ஆனால் அவர்களது உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை, அவர்களும் பிரிந்தனர். மூன்றாவது முறையாக விவாகரத்து பெற்ற பிறகு, தனிமையின் வருத்தத்தால் ராணி தாக்கப்பட்டார். புற்றுநோயும் மீண்டும் தாக்கியது, இந்த நேரத்தில் இராணிக்கு அதிக ஆசை ஒன்றும் ஏற்படவில்லை, ஆனால் தனது மகள் திருமணம் செய்து கொள்வதைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே..[2]
இறப்பு
தொகுஇராணி புற்றுநோயால் 1993 மே 27 அன்று தனது 46 வயதில் கராச்சியில் இறந்தார், அவரது மகள் இராரபியாவின் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு. இராணி இறந்த சிறிது நேரத்திலேயே, கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மற்றும் மகளின் மரணத்தை ஒருபோதும் அறியாத அவரது தாயும் இறந்தார். ராணியின் ஒரே சகோதரியும் மூன்று மாதங்கள் கழித்து இறந்தார். இராணி மற்றும் அவரது தாயார் முஸ்லிம் டவுன் கல்லறையில் லாகூரில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டனர்.[1][2]
விருதுகள்
தொகுஇராணி 1968 இல் மேரா கர் மேரி ஜன்னத் படத்திற்காக நிகர் விருதை வென்றார்.[2] 1983 ஆம் ஆண்டில் சோனா சாண்டி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மற்றொரு நிகர் விருதையும் வென்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "In memoriam: The Rani of our hearts lives on". 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Sarfaraz Nawaz and Rani: Their Wedding and Beyond பரணிடப்பட்டது 2019-11-27 at the வந்தவழி இயந்திரம் Asian Women Magazine, Retrieved 4 July 2019