இராதா சலுஜா

இந்திய நடிகை

இராதா சலுஜா ( Radha Saluja ) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக பாலிவுட், பஞ்சாபி மற்றும் தமிழ், சில வங்காளம், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] புனே, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவியாவார். இவர் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனுக்கு கதாநாயகியாக இதயக்கனி (1975) மற்றும் இன்றுபோல் என்றும் வாழ்க (1977) ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹர் ஜீத் (1972) மற்றும் ஏக் முத்தி ஆஸ்மான் (1973) போன்ற இந்திப் படங்களுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 1975 இல், இராதா திரைப்படமான மோர்னி (1975) என்ற பஞ்சாபித் திரைப்படத்தில் தோன்றினார்.

இராதா சலுஜா
பிறப்புமும்பை , மகாராட்டிரம் , இந்தியா
மற்ற பெயர்கள்இராதா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1971–2006
வாழ்க்கைத்
துணை
சமீன் சைதி
உறவினர்கள்ரேணு சலுஜா (சகோதரி)

தொழில் தொகு

1970 களின் முற்பகுதியில், ஆஜ் கி தாசா கபர் (1973), சீக்கிய மதத் திரைப்படமான மன் ஜீதே ஜக் ஜீத் (1973), துக் பஞ்சன் தேரா நாம் (1974) போன்ற பல படங்களில் கதாநாயகியாகத் தோன்றினார். மன் ஜீதே ஜக் ஜீத் படத்தில் இவர் சுனில் தத்துடன் நடித்தார். தமிழ்த் திரைப்படங்களான இதயக்கனி (1975) மற்றும் இன்றுபோல் என்றும் வாழ்க (1977) ஆகிய படங்களில் ம. கோ. இராமச்சந்திரனுடன் கதாநாயகியாக நடித்தார். இவை இரண்டும் தமிழ்த் திரையுலகில் 1975 மற்றும் 1977 ஆம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப்படங்காளாக அமைந்தன. என். டி. ராமராவ் மற்றும் இரசினிகாந்துடன் டைகர் (1979) என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தார். 1981 இல், இவர் விது வினோத் சோப்ராவின் சசயே மௌட் படத்தில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை தொகு

இராதா சலுஜா பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ரேணு சலுஜாவின் மூத்த சகோதரியாவார்.[2]

2003இல் பனானா பிரதர்ஸ் என்ற பஞ்சாபி படத்தில் கடைசியாக நடித்த பின்னர் திரைபடங்களில் நடிப்பதிலிருந்து விலகி லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அங்கு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சமீம் சைதி என்பவரை மணந்தார். மேலும் இரண்டு இசைக் குழுக்களுடன் சேர்ந்து அமெரிக்கா முழுவதும் பாடினார். அமெரிக்காவில் வசிக்கும் போது, இராதா லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆசிய மொழிகளின் சிறப்பு மொழிபெயர்ப்பாளராகவுன் பணிபுரிந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Golmaal Returns falls flat". Sify. Archived from the original on 12 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
  2. "Radha Saluja". indicine. Archived from the original on 16 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
  3. "The star next door". India Today. 15 May 1994. Archived from the original on 17 July 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_சலுஜா&oldid=3918268" இலிருந்து மீள்விக்கப்பட்டது