ரேணு சலுஜா (Renu Saluja) (5 ஜூலை 1952 - 16 ஆகஸ்ட் 2000) இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஆவார். 1980கள் மற்றும் 1990களில், கோவிந்த் நிகலானி, விது வினோத் சோப்ரா, சுதிர் மிசுரா, சேகர் கபூர், மகேசு பட் மற்றும் விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்களுடனும், பாலிவுட் கலை இயக்குநர்களுடனும் இவர் பணியாற்றினார். இவரது பணி பல திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை உள்ளடக்கி இருந்தது.[2]

ரேணு சலுஜா
பிறப்பு(1952-07-05)5 சூலை 1952
தில்லி, இந்தியா[1]
இறப்பு16 ஆகத்து 2000(2000-08-16) (அகவை 48)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்Indian
பணிதிரைப்படத் தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
1980–2000
வாழ்க்கைத்
துணை
  • விது வினோத் சோப்ரா
    (தி. 1976; ம.மு. 1983)
  • சுதி மிசுரா]] (தி. 1988⁠–⁠2000)
உறவினர்கள்இராதா சலூஜா (சகோதரி)

ரேணு, பரிந்தா (1989), தாராவி (1993), சர்தார் (1993) மற்றும் காட்மதர் (1999) ஆகிய படங்களுக்கு சிறந்த படத் தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றுள்ளார். மேலும், பரிந்தா (1989) மற்றும் 1942: எ லவ் ஸ்டோரி (1994) படங்களுக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். [3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ரேணு, பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1974 இல் புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்குநர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்தார். ஆனால், இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக, இவர் படத்தொகுப்புப் பிரிவில் சேர்ந்து 1976 இல் பட்டம் பெற்றார். பின்னர், திரைப்படத் தொகுப்பாளராக ஒரு தொழிலைத் தொடங்கினார். அந்த நேரத்தில் இந்த துறையில், ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். [4] [5]

தொழில்

தொகு

இவர் முதலில் விது வினோத் சோப்ராவின் மர்டர் அட் மங்கி ஹில் (1976) திரைப்படத்தில் பணியாற்றினார். இப்படத்தில் இவர் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். [6] இந்தத் திரைப்படம் 1977-78 இல் சிறந்த பரிசோதனைத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. [7] திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் பயிற்சி முடிந்து வெளியேறியதும், ரேணு தன்னுடன் படித்த சயீத் அக்தர் மிர்சாவின் ஆல்பர்ட் பின்டோ கோ குஸ்ஸா கியோன் அதா ஹை (1980), அதைத் தொடர்ந்து விது வினோத் சோப்ராவின் சசயே மாட் (1981), பின்னர் மற்றொரு வகுப்புத் தோழன் குந்தன் ஷாவின் நகைச்சுவை திரைப்படமான, ஜானே பி தோ யாரோ (1983), போன்றவற்றில் பணியாற்றினார். இவையனைத்தும் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[8]

பிறகு, தூர்தர்ஷனுடன் சேர்ந்து இவரது தொழில் வாழ்க்கை தொடர்ந்தது.

1990களில் ஹைதராபாத் புளூஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த புதிய சுயாதீனத் திரைப்படங்களில் ஈடுபட்டார். ஜானே பி தோ யாரோன் (1983), கபி ஹான் கபி நா (1993), பாண்டிட் குயின் (1995), ஜெய கங்கா (1996), பர்தேஸ் (1997), ராக்ஃபோர்ட் (1999) மற்றும் ஹே ஆகியவை ரேணு பணியாற்றிய சில பிரபலமான திரைப்படங்கள் ஆகும். ராம் (2000). நாகேஷ் குகுனூரின் பாலிவுட் காலிங் மற்றும் இறுதியாக 2003 இல் வெளியான கல்கத்தா மெயில் இவர் கடைசியாக பணிபுரிந்த திரைப்படம் ஆகும்.[9]

சொந்த வாழ்க்கை

தொகு

இவரது மூத்த சகோதரி இராதா சலுஜா ஒரு திரைப்பட நடிகை ஆவார். அவர் ஏராளமான இந்தி, பஞ்சாபி மற்றும் பிற பிராந்திய படங்களில் பணிபுரிந்தார். இவரது இளைய சகோதரி மருத்துவர் குங்கும் கதாலியா ஒரு சிறப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர். ரேணு தன்னுடன் கல்லூர்யில் படித்த இயக்குனர் விது வினோத் சோப்ராவை மணந்தார். பின்னர் இவர்கள் ஜானே பி தோ யாரோன் (1983) படத்தில் ஒன்றாக வேலை செய்தனர். பின்னர் இவர்கள் பிரிந்தாலும், ரேணு அவரது அனைத்து படங்களையும் தொடர்ந்து படத்தொகுப்பு செய்தார். மேலும், அவரது உதவி இயக்குநராகவும் இருந்தார். வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் இயக்குனர் சுதிர் மிசுராவுடன் நெருக்கமாக இருந்தார். தாராவி மற்றும் இஸ் ராத் கி சுபா நஹின் (1996) உட்பட பல படங்களில் அவருடன் பணிபுரிந்தார்.[10] [11]

இறப்பு

தொகு

வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரேணு, ஆகஸ்ட் 16, 2000 அன்று மும்பையில் இறந்தார். [12]

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_சலுஜா&oldid=4108160" இலிருந்து மீள்விக்கப்பட்டது