இராபர்ட் ஆர்டுகிரேவ்
இராபர்ட் ஆர்டுகிரேவ் (Robert L. Hardgrave, Jr.,, 6, பெப்ரவரி, 1939 - 21, மே, 2023)[1] என்பவர் ஒரு அமெரிக்க ஆய்வாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் அரசு, ஆசியவியல் துறையின் வருகைதரு பேராசிரியராக இருந்தவர். இவர் அமெரிக்காவில் ஏ. கே. ராமானுஜனிடம் தமிழ் மொழியை முறையாக கற்றவர். இவர் தனது திராவிட இயக்க ஆய்வுகளுக்காகவும், தமிழ்நாடு குறித்த ஆய்வுகளுக்காகவும் அறியப்படுகிறார். இவரது ஆய்வுகள் எம். எஸ். எஸ். பாண்டியன், கா. சிவத்தம்பி, கோ. கேசவன் முதலியோர் இயங்கி நூல் எழுதுவதற்கு இராபர்ட் ஆர்டுகிரேவின் ஆய்வு முயற்சிகள் பின்புலமாக இருந்தன என்று கூறப்படுகிறது.[2]
ஆய்வுப் பணிகள்
தொகுதிராவிட இயக்கம் குறித்து பெரியதாக நூல்கள் எதுவும் எழுதப்படாத 60களில் தன் ஆய்வுக்காக இராபர்ட் ஆர்டுகிரேவ் சென்னை வந்தார். பல மாதங்கள் சென்னையில் தங்கி திராவிட இயக்கத் தலைவர்கள் பலரைச் சந்தித்து, திராவிட இயக்க மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு, துண்டறிக்கைகளைத் திரட்டி, கட்டுரைகளைத் தொகுத்தும் திராவிட இயக்கம் என்ற நூலை 1962 இல் எழுதி முடித்தார். அது பம்பாயில் 1965 இல் நூலாக வெளிவந்தது.[2]
தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக 1964 இல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை களத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். இச்சமயத்தில் தமிழகத் திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்டவராக ஆனார். அதனால் சிவாஜி கணேசன், ம.கோ.இரா போன்ற முன்னணி நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும், திரைப்பட இதழ்களின் ஆசிரியர்களையும், இரசிகர் மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பழகினார். ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருந்த எம். ஆர். ராதாவை சிறையில் நேர்காணல் செய்தார்.[3] இச்சமயத்தில் எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழில் தமிழ்நாட்டின் திரைப்படங்களும் அரசியல் விழுப்புணர்வும் என்ற கட்டுரையை 1975 சனவரியில் எழுதினார்.[2]
திரைப்படங்கள் குறித்த ஆய்வுக்காக இவர் சேகரித்த நேர்காணல்கள், ஒளிப்படங்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், வெளியாடுகள் ஆகியவற்றின் படி ஒன்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு வழங்கிவிட்டுச் சென்றார். [2]
இவரது தமிழ்நாட்டில் நாடார் சமூகம்: ஒரு சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் (1969) என்ற புகழ்பெற்ற நூலானது நவீன தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆவணம் போன்று உள்ளதாக க. பஞ்சாங்கம் குறிப்பிடுகிறார்.[2]
எழுதிய நூல்கள்
தொகு- The Dravidian Movement (1965) (திராவிட இயக்கம்)
- The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change (1969, 2006) (தமிழ்நாட்டில் நாடார் சமூகம்: ஒரு சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள்)
- Comparative Politics: The Quest for Theory (with James A. Bill, 1973, 1981) (ஒப்பீட்டு அரசியல்)
- Essays in the Political Sociology of South India (1993) (தென் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகவியல் பற்றிய கட்டுரைகள் )
- India: Government and Politics of a Developing Nation (with Stanley A. Kochanek, 7th ed., 2007). (இந்தியா: ஒரு வளரும் நாட்டின் அரசு மற்றும் அரசியல்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Passing of Prof. Robert L. Hardgrave, Jr" (in ஆங்கிலம்).
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "அஞ்சலி: தமிழ்நாட்டை அனுபவித்து உணர்ந்த அறிஞர், கட்டுரையாளர் க. பஞ்சாங்கம்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2023.
- ↑ Baskaran, Theodore (2023-12-12). "Bob Hardgrave (1939-2023): A friend of India" (in ஆங்கிலம்).
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)