இராபர்ட் பிராண்டன்பெர்கர்
இராபர்ட் எச். பிராண்டன்பெர்கர் (Robert Brandenberger) (பிறப்பு 1956 பெர்னாவில்) ஒரு சுவிஸ் - கனடிய கோட்பாட்டு அண்டவியலாளரும் கனடாவின் மாண்ட்ரீல் கியூபெக்கில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.
Brandenberger (1987 photo) | |
பிறப்பு | 1956 (அகவை 67–68) |
---|---|
துறை ஆலோசகர் | William Henry Press, Arthur Jaffe |
முக்கிய மாணவர் |
வாழ்க்கை
தொகுபிராண்டன்பெர்கர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஈடிஎச் சூரிச்சில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் , மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிஏஎம்டிபி - யில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கீழ் முதுகலை பட்டதாரி மாணவராக இருந்தார்.[1] கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சாண்டா பார்பராவில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் முதுகலை பட்டப் படிப்பையும் செய்தார். பேராசிரியர் பிராண்டன்பெர்கர் 1987 இல் பிரவுன் பல்கலைக்கழகத்தின் பீடத்தில் சேர்ந்தார் , பின்னர் 2004 இல் அவர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2][3] கோட்பாட்டு இயற்பியலுக்கான தகைமை நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார்.[4] ராபர்ட் பிராண்டன்பெர்கர் தனது இணை ஊழியரான கம்ருன் வஃபாவுடன் இணைந்து சர வளிம அண்டவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.[5] இந்தக் கோட்பாடு உப்புதல் அண்டவியலுக்கு மாற்றாகும்.
தகைமைகளும் , விருதுகளும்
தொகு1988 ஆம் ஆண்டில் ஆல்பிரட் பி. ஸ்லோன் ரிசர்ச் பெல்லோஷிப் , 1988 ஆம் ஆண்டில் எரிசக்தித் துறையின் சிறந்த ஜூனியர் ரிசர்ச்சர் விருது , 2009 ஆம் ஆண்டில் கில்லம் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் 2011 ஆம் ஆண்டில் கோட்பாட்டு மற்றும் கணித இயற்பியலில் சிஏபி - சிஆர்எம் பரிசு உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.[6][7][8][9]
2001 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Stephen Hawking helped elevate Canada’s profile in physics community. The Star. Peter Goffin. The Canadian Press. March 14, 2018.
- ↑ "Robert Brandenberger". www.physics.mcgill.ca.
- ↑ Government of Canada, Industry Canada (November 29, 2012). "Canada Research Chairs". www.chairs-chaires.gc.ca.
- ↑ "Robert Brandenberger | Perimeter Institute". www.perimeterinstitute.ca.
- ↑ Inflation (cosmology)#cite ref-95
- ↑ "E. E. Just Program | Home". Dartmouth.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
- ↑ "Researchers @ Brown". vivo.brown.edu.
- ↑ Phone: 514-398-7698, Contact Information Contact: Allison Flynn Organization: Media Relations Office Email: allison j flynnmcgill ca Office. "McGill physicist awarded Killam Research Fellowship". Channels.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "CAP Medal Press Release - 2011 CRM". Archived from the original on 2015-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-03-04.
- ↑ "APS Fellow Archive". APS. பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.