இராபர்ட் ராண்டல்
இராபர்ட் ராண்டல் (Robert Randal) (1766 - மே 2, 1834) மேற்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் தொழில் புரியும் ஒரு தொழிலதிபரும் அரசியல் பிரமுகரும் ஆவார்.
சுயசரிதை
தொகு1766இல் மேரிலாந்தில் பிறந்த இராபர்ட் ராண்டால் (சில ஆதாரங்களில் வர்ஜீனியா) 1809 க்குப் பிறகு, தனது குடும்பப் பெயரான ராண்டல் என்பதன் எழுத்துக்களில் மாற்றம் செய்து கொண்டார் (Randall என்பதை Randal என மாற்றிக்கொண்டார்). 1795 ஆம் ஆண்டில், இவர் ஒரு கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இந்நிறுவனம் கீழ் மிச்சிகன் தீபகற்பத்தை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வாங்க விரும்பியது. 1795ஆம் ஆண்டில், இவர், வெர்மான்ட்டின் எபினேசர் ஆலன் மற்றும் சார்லஸ் விட்னி மற்றும் டெட்ராய்டில் உள்ள பல பிரித்தானியர்களான ஜான் அஸ்கின் மற்றும் வில்லியம் ராபர்ட்சன் உள்ளிட்ட ஒரு கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அந்நிறுவனம் முழு கீழ் மிக்சிகன் தீபகற்பத்தையும் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வாங்க திட்டமிட்டது. [1] இந்த திட்டத்துடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்காக இவர் அவமதிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Account of a Plot for Obtaining the Lower Peninsula of Michigan from the United States in 1795 by J. V. Campbell". Collections of the Pioneer Society of the State of Michigan together with Reports of County Pioneer Societies, Vol VIII (second ed.). Lansing, Mich.: Wynkoop Hallenbeck Crawford. 1907 [1886]. pp. 406–411. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.