இராமச்சந்திர ராஜு
கருடா ராம் என்று அழைக்கப்படும் இராமச்சந்திர ராஜு (Ramachandra Raju) கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப் படங்களில் முதன்மையாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். கே.சி.எஃப் அத்தியாயம் 1 என்ற படத்தில் ‘கருடா’ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காகவும்,[2] திரையில் தனது மேலாதிக்க இருப்புக்காகவும் இவர் புகழ் பெற்றார்.[3]
இராமச்சந்திர ராஜு Ramachandra Raju | |
---|---|
பிறப்பு | இராமச்சந்திர ராஜு 7 ஜூலை 1980 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | கருடா ராம்[1] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2018–தற்போது வரை |
தொழில் வாழ்க்கை
தொகுகருடா இதற்கு முன்பு நடிகர் யாஷின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றினார்.[3] கே. சி. எஃப் அத்தியாயம் 1 (2018) யாஷுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் எதிமறை வேடத்தில் நடித்த இவர் அதற்கான பாராட்டுக்களைப் பெற்றார். இதன் மூலம் நான்கு தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் எதிர்மறையான வேடங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற உதவியது.[4]
சுல்தான் (2021)[5][6][7] படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்த ராஜு, கோடியில் ஒருவன் (2021)[8] மற்றும் யானை (2022)[9] அரண்மனை 4[10] மற்றும் ஹிட் லிஸ்ட் (2024)[11] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ராஜு மகா சமுத்திரம் (2021)[12] படத்தின் மூலம் தெலுங்கிலும் , ஆராட்டு (2022)[13] திரைப்படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Garuda Ram's got a finger in every pie of the Southern film industry". The Times of India. 10 January 2022.
- ↑ Sebastian, Shilpa (28 July 2020). "Meet Ramachandra Raju, the 'KGF' villain". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/meet-ramachandra-raju-the-kgf-villain/article32210260.ece.
- ↑ 3.0 3.1 "How KGF changed the life of Yash's bodyguard to make him a busy bee in films". International Business Times. 23 January 2020.
- ↑ "'KGF' villain Ramachandra Raju ready to rock Kollywood? – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/kgf-villain-ramachandra-raju-ready-to-rock-kollywood/articleshow/68689110.cms.
- ↑ "KGF-fame Ram to play villain in Karthi-Rashmika starrer". The New Indian Express.
- ↑ "'Jiivi' actor Vetri's next to star KGF villain". The New Indian Express.
- ↑ "KGF villain in Ravi-Taapsee's next? – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kgf-villain-in-ravi-taapsees-next/articleshow/70803212.cms.
- ↑ "KGF's antagonist Garuda, Ramchandra Raju, now 'Bumper' villain". The New Indian Express.
- ↑ "Yaanai review. Yaanai Tamil movie review, story, rating". IndiaGlitz.com.
- ↑ "Aranmanai 4 to take Thangalaan's Republic Day 2024 release date?". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
- ↑ "Hit List Review: A Crime Thriller That Works in Parts". Times Now. 30 May 2024.
- ↑ "Maha Samudram Movie Review: A joyless, indulgent drama". சினிமா எக்ஸ்பிரஸ்.
- ↑ "KGF fame Ramachandra Raju to play antagonist in Mohanlal's Aaraattu". India Today.