கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன் (Kodiyil Oruvan), 2021ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ்-மொழி அரசியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த இத்திரைப்படம், ஆனந்த கிருஷ்ணனால் இயக்கப்பட்டது.[1] இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா நடிக்கின்றனர்.[2] விஜய் ஆண்டனி இப்படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்தார்.[3]

கோடியில் ஒருவன்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஆனந்தகிருஷ்ணன்
தயாரிப்புடிடி ராஜா
டிஆர் சஞ்சய் குமார்
கமல் போஹ்ரா
லலிதா தனஞ்செயன்
பிரதீப்
பங்கஜ் போஹ்ரா
கதைஆனந்தகிருஷ்ணன்
இசைநிவாஸ் கே. பிரசன்னா, ஹரிஷ் அர்ஜூன்
நடிப்புவிஜய் ஆண்டனி
ஆத்மிகா
ஒளிப்பதிவுஎன்எஸ் உதய குமார்
படத்தொகுப்புவிஜய் ஆண்டனி
கலையகம்இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
வெளியீடுசெப்டம்பர் 17, 2021 (2021-09-17)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

பிப்ரவரி 2021 இல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.[4]

ஒலிப்பதிவு தொகு

கோடியில் ஒருவன்
ஒலிப்பதிவு
நிவாஸ் கே.பிரசன்னா
ஒலிப்பதிவு2021
இசைப் பாணிசிறப்பு திரைப்பட ஒலிப்பதிவு
நீளம்24:37
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரேகாமா
இசைத் தயாரிப்பாளர்இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்

இப்படத்தின் பாடல்களை நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஐந்து பாடல்களைக் கொண்ட இந்த இசைத் தொகுப்பின் உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியது.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அவன் பாத்து சிரிக்கல"  மாள்வி சுந்தரேசன் 5:29
2. "நான் வருவேன் செக்ஸி"  ஹரிசரன், நிவாஸ் கே பிரசன்னா 5:28
3. "சேரி கீதம் (ஆத்தி)"  கௌதம் மேனன், பிரேம்ஜி அமரன், விஜய் ஆண்டனி, நிவாஸ் கே. பிரசன்னா 4:46
4. "நீ காணும் கனவே"  சத்யபிரகாஷ் தர்மர், அபிஷேக் ரவிசங்கர், வஞ்சுலா ஒப்பிலி 4:48
5. "சில நாள் கருவில்"  சுகன்யா வரதராஜன் 4:06

வெளியீடு தொகு

இப்படம் 17 செப்டம்பர் 2021 அன்று தமிழ், தெலுங்கு("விஜய ராகவன்" என்ற தலைப்பில்), மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் ஹிந்தி மொழிமாற்றம் பதிப்பு விஜய் ராகவன் என்ற பெயரில் யூடியூப்பில் வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.[5][6][7][8] படத்தின் செயற்கைக்கோள் உரிமை கலர்ஸ் தமிழுக்கு விற்கப்பட்டது. படத்தின் இணைய ஓடையாக்கல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "விஜய் ஆண்டனி - ஆனந்த் கிருஷ்ணன் இணையும் கோடியில் ஒருவன்". https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/601423-vijay-antony-kodiyil-oruvan-first-look.html. 
  2. "Vijay Antony’s next titled Kodiyil Oruvan" (in en). https://newstodaynet.com/index.php/2020/09/24/vijay-antonys-next-titled-kodiyil-oruvan/. 
  3. "Vijay Antony's Kodiyil Oruvan to release in theatres on September 17" (in en). https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijay-antony-s-kodiyil-oruvan-to-release-in-theatres-on-september-17-1848048-2021-09-01. 
  4. "Vijay Antony’s Kodiyil Oruvan shoot has been completed" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-antonys-kodiyil-oruvan-shoot-has-been-completed/articleshow/80752847.cms. 
  5. "கோடியில் ஒருவன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/711356-kodiyil-oruvan-release-date-announcement.html. 
  6. "Vijay Antony's 'Kodiyil Oruvan' to release on September 17" (in en). https://www.sify.com/movies/vijay-antonys-kodiyil-oruvan-to-release-on-september-17-news-tamil-vjbfezhfbiajh.html. 
  7. "Vijay Antony's Kodiyil Oruvan to release on this date" (in en). https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vijay-antonys-kodiyil-oruvan-to-release-on-this-date/articleshow/85824175.cms. 
  8. "Vijay Antony's 'Kodiyil Oruvan' to release in four languages" (in en). https://www.sify.com/movies/vijay-antonys-kodiyil-oruvan-to-release-in-four-languages-news-tamil-vbdlhzghacefc.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடியில்_ஒருவன்&oldid=3718245" இருந்து மீள்விக்கப்பட்டது