இராமலிங்கம் பரமதேவா
1983 மட்டக்களப்பு சிறை தகர்ப்பின் சூத்திரதாரி
ராமலிங்கம் பரமதேவா (Ramalingam Paramadeva) என்பவர் இலங்கையில் 1983 மட்டக்களப்பு சிறை உடைப்பு திட்டத்தை வடிவமைத்தவர். சிறையில் இருந்து தப்பித்த பிறகு இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் தமிழ் புலிகள் சார்பாக இவர் 1984 மட்டக்களப்பு சிறை உடைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு, ஒரு பெண் அரசியல் கைதியை விடுதலை செய்வித்தார்.
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் [1] 1984 இல் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடியில் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Eastern warlord". Frontline. 2004-04-09 இம் மூலத்தில் இருந்து 2009-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090213194709/http://www.hinduonnet.com/fline/fl2107/stories/20040409006000800.htm.