இராமேசுவர் நீக்ரா

இந்திய அரசியல்வாதி

இராமேசுவர் நீக்ரா (Rameshwar Neekhra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராமேசுவர் நிக்ரா என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இந்தி மொழி திரைப்படத்துறையின் மூத்த நடிகர் அசுதோசு ராணாவின் உறவினராகவும் அறியப்படுகிறார். சட்டம் படித்து பட்டதாரியான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக செயற்பட்டார். இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை மக்களவை 7 மற்றும் 8 ஆவது மக்களவைக்கு பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மத்திய பிரதேச மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை சேவா தளத்தின் தேசிய துணைத் தலைவர், மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரசின் தலைவர் 1985-1987, டாக்டர் அரி சிங் கூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழகத் தலைவர், 1968-1970 சிக்சக்கு காங்கிரசின் நிறுவனர் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து தற்போது மத்தியப் பிரதேச காங்கிரசு கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். [1] [2] [3]

இராமேசுவர் நீக்ரா
Rameshwar Neekhra
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980-1989
முன்னையவர்அரி விசுணு கமத்து
பின்னவர்சர்தாச்சு சிங்
தொகுதிநர்மதாபுரம், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூலை 1946 (1946-07-09) (அகவை 78)
பலோகா, கதர்வாரா தாலுக்கா, நர்சிங்பூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது மத்தியப் பிரதேசம் , இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இரமா தேவி நீக்ரா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1989. p. 39. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.
  2. Committees and Other Bodies on which Lok Sabha is Represented Wholly Or Partially. Lok Sabha Secretariat. 1980. p. 7. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.
  3. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1989. p. 103. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேசுவர்_நீக்ரா&oldid=3816956" இலிருந்து மீள்விக்கப்பட்டது