நர்சிங்பூர் மாவட்டம்

இது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் மாவட்ட நிர்வாக தலைநகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

நர்சிங்பூர் மாவட்டம் (Narsinghpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. நர்சிங்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. நரசிங்கப்பூர் நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். 2001 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் கல்வியறிவு கூடிய மாவட்டம் இதுவாகும்.

நர்ஷிங்பூர் மாவட்டம்

புவியியல் தொகு

நரசிங்கபூர் மாவட்டத்தின் பரப்பளவு 5,125.55 கி.மீ ஆகும். இந்த மாவட்டம் ஜபல்பூர் பிரிவின் ஒரு பகுதியாகும். இதன் வடக்கில் சாகர் மற்றும் தாமோ மாவட்டங்களும், கிழக்கில் ஜபல்பூர் மாவட்டமும், தென்கிழக்கில் சிவனி மாவட்டம், தெற்கில் சிந்த்வாரா மாவட்டமும், மேற்கில் ஹோசாங்காபாத் மாவட்டமும், வட மேற்கில் ரைசன் மாவட்டமும் அமைந்துள்ளது. இதன் நிர்வாக நகரம் நரசிங்கபூர் ஆகும்.[1]

இந்த மாவட்டம் நர்மதா ஆற்று படுகையில் அமைந்திருக்கிறது. இதன் வடக்கு எல்லையை விந்திய மலையின் வரம்புகளும், மாவட்டத்தின் தெற்கு எல்லையை சத்புத்ரா மலைத்தொடரின் வரம்புகளும் உருவாக்குகின்றன. இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 359.8 மீற்றர் உயரத்தில் உள்ளது.[2]

வரலாறு தொகு

நர்சிங்பூர் மாவட்டம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாக்பூரின் மராத்தா போன்ஸ்லே மகாராஜாக்களின் வசம் இருந்தது. மேலும் இது "கடரியா கெடா" என்று அழைக்கப்பட்டது. பின்னர் ஜாத் தலைவர் ஒருவர் இந்த இடத்தை ஆக்கிரமித்து அதில் நரசிம்மருக்கான கோயில் ஒன்றை கட்டினார். இதனால் இப்பகுதி நர்சிங்பூர் என்று பெயர் பெற்றது. பின்னர் 1818 ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் பிரித்தானியர் வசம் சென்றது. நர்சிங்பூர் மாவட்டம் மத்திய மாகாணங்ள் மற்றும் பெராரின் நர்மதா பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. 1947 ஆம் ஆண்டின் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் மத்திய பிரதேசத்தின் பகுதியாக மாறியது.

புள்ளி விபரங்கள் தொகு

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி நரசிங்கபூர் மாவட்டத்தில் 1,091,854 மக்கள் வாழ்கின்றனர்.[3] இந்த தொகை சைப்பிரசு தேசத்தின்[4] அல்லது அமெரிக்க மாநிலமான தீவின் சனத்தொகைக்கு சமமானதாகும்.[5] சனத்தொகை அடிப்படையில் இந்தியாவின் 640 மாவட்டங்களில் 418 ஆவது இடத்தைப் பெறுகின்றது. நரசிங்கபூர் மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (550 / சதுர மைல்) 213 மக்கள் அடர்த்தி உள்ளது.[3] 2001 - 2011 வரையான காலப்பகுதியில் இம்மாவட்டத்தின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் 14.04% ஆகும். இங்கு வாழும் மக்களின் கல்வியறிவு 76.79% வீதம் ஆகும்.[3] நரசிம்மபூரில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 917 பெண்கள் உள்ளனர்.[3] 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் போது இந்த மாவட்டத்தில் 99.57% மக்கள் இந்தி மொழியை முதன்மை மொழியாக பேசினர்.[6]

போக்குவரத்து தொகு

மும்பையில் இருந்து கல்கத்தா வரையிலான பிரதான புகையிரத பாதை நர்மதா பள்ளத்தாக்கை தொடர்ந்து மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது. புகையிரத நிலையத்தை அண்மித்து பேருந்து நிலையம் காணப்படுகிறது. நகரம் தேசிய நெடுஞ்சாலை-26 ஐ சுற்றி அமைந்துள்ளது.

உட்பிரிவுகளும் ஆட்சியும் தொகு

சட்டமன்றத் தொகுதிகள்:[7]
 • கோட்டேகாவ்
 • நர்சிங்பூர்
 • தெந்துகேடா
 • காடர்வாரா

கல்வி தொகு

அரசு பல்நோக்கு மேல்நிலைப்பள்ளி

அரசு முதுகலை கல்லூரி

சவர வித்யா பீத் பள்ளி

நரசிங் பொதுப் பள்ளி

கேந்திரியா வித்யாலயா

சரஸ்வதி பள்ளி

லாரல்ஸ் ஆங்கில நடுத்தர உயர்நிலைப்பள்ளி

சியால் சர்வதேச பள்ளி

முக்கிய நபர்கள் தொகு

மகர்ஷி மகேஷ் யோகி

அசுதோஷ் ராணா

பவானி பிரசாத் மிஸ்ரா

எஸ் எச் ராசா

ஸ்ரீ ஷியாம் சுந்தர் ராவத்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "Narsinghpur, Districts of Madhya Pradesh, Narsinghpur Information Online, All about Narsinghpur". 2010-07-14 இம் மூலத்தில் இருந்து 2010-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100714155238/http://mponline.in/Profile/Districts/Narsinghpur.asp. 
 2. "Narasinghpur". http://narsinghpur.nic.in/. 
 3. 3.0 3.1 3.2 3.3 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". http://www.census2011.co.in/district.php. 
 4. "The World Factbook — Central Intelligence Agency" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. 
 5. "2010 Resident Population Data" இம் மூலத்தில் இருந்து 2011-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/619lRoKht?url=http://2010.census.gov/2010census/data/apportionment-pop-text.php. 
 6. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". http://www.censusindia.gov.in/2011census/C-16.html. 
 7. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்