இராம் சந்தர்

தோபி இராம் சந்தர் (Dhobi Ram Chander) 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாக்கித்தான் போரின் போது மகாவீர் சக்ரா விருது பெற்ற ஒரு குடிமகன் ஆவார். மகாவீர் சக்ரா விருது பெற்ற இராணுவப் படைவீரர் அல்லாத இரண்டு குடிமக்களில் இவரும் ஒருவர் ஆவார். [1] [2]

இராம் சந்தர்
Ram Chander

பிறப்பு1921
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
இறப்பு1998
சார்பு
சேவை/கிளைபிரித்தானிய இந்தியா இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்மே 1947 - தகவல் இல்லை
தரம்இந்தியத் தரைப்படை
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
விருதுகள் மகா வீர சக்கரம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இராம் சந்தர் 1921 ஆம் ஆண்டு பஞ்சாபின் சலந்தரில் உள்ள கோட் கிசன் சந்து பகுதியில் பாகிர் சந்துக்கு மகனாகப் பிறந்தார். [1]

இராணுவ வாழ்க்கை

தொகு

1947 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய இராணுவத்தின் மெட்ராசு பொறியியலாளர் குழுமத்தின் 14 ஆம் படைப்பிரிவின் பொறியியல் பிரிவில் சந்தர் சேர்ந்தார். இந்திய இராணுவத்தில் ஒரு குடிமகனாகவும், தொழிலில் ஒரு சலவை செய்பவராகவும் இருந்தார்.[1]

1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று ஆயுதப்படை அதிகாரி எஃப்.டி.டபிள்யூ பாலோனின் தலைமையில் சம்முவுக்குச் செல்லும் பாதுகாவல் குழுவின் ஒரு பகுதியாக சந்தர் இருந்தார். பாதுகாவல் குழு பாம்ப்லாவை அடைந்தபோது, எதிரியால் ஒரு பாலத்தின் மேல் தளம் அகற்றப்பட்டு சாலைத் தடை உருவாக்கப்பட்டிருந்தது. பாலம் தொடர்ச்சியான தீயில் இருந்தபோது, பாதுகாவல் தளபதிக்கு தளத்தை மாற்ற சந்தர் உதவினார். அதிகாரி பாலோன் காயமடைந்தபோது, சந்தர் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து எதிரிகளை முன்னேற விடாமல் வைத்திருக்க உதவினார். மேலும் எதிரிகளை சுட்டுவீழ்த்தி ஐந்து முதல் ஆறு பேர் வரை உயிரிழப்புகளையும் ஏற்படுத்தினார். படையிலிருந்து தனியாகப் பிரிந்த நிலையில் காயம்பட்டு இரத்தம் இழந்துகொண்டிருந்த இவருடைய அதிகாரி பாலோனுக்கு 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள படைப்பகுதிக்கு வர உதவினார் [1]

இறப்பு

தொகு

இராம் சந்தர் 1998 ஆம் ஆண்டு இறந்தார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Chakravorty, B. (1995). Stories of Heroism: PVC & MVC Winners (in ஆங்கிலம்). Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170235163.
  2. "Ram Chander | Gallantry Awards". gallantryawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
  3. Vijay Mohan (7 March 2016). "Decorated washerman waited for promised land till his last breath". The Tribune. http://www.tribuneindia.com/news/punjab/community/decorated-washerman-waited-for-promised-land-till-his-last-breath/205641.html. Vijay Mohan (7 March 2016). "Decorated washerman waited for promised land till his last breath". The Tribune.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சந்தர்&oldid=3383063" இலிருந்து மீள்விக்கப்பட்டது