இராம் லால் தாகூர்

இந்திய அரசியல்வாதி

இராம் லால் தாகூர் (Ram Lal Thakur) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாவார். இமாச்சலப் பிரதேசத்தின் சிறீ நைனா தேவிச்சி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[1]

இராம் லால் தாகூர்
Ram Lal Thakur
உறுப்பினர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2017
தொகுதிசிறீ நைனா தேவிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1951 (1951-06-07) (அகவை 73)
பிலாசுப்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

1951 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதியன்று அன்று பிலாசுபூர் மாவட்டத்தில் உள்ள கியால் கிராமத்தில் இவர் பிறந்தார். சட்டப் படிப்பிலும் இளங்கலையிலும் . பட்டங்கள் பெற்றுள்ளார். பணியாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நலனில் முதுகலை பட்டயங்கள் பெற்றார். [2] சட்டப் பாடத்திலான இளநிலை படிப்பை சிம்லாவிலுள்ள இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்தார். கமலேசு தாகூரை திருமணம் செய்து கொண்டார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இராம்லால் ஒரு விளையாட்டு வீரராக இருந்தார் தேசிய அளவில் ஆறு முறை கபடியில் மாநிலத்தை இமாச்சலப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மூன்று முறை அணியின் தலைவராக இவர் இருந்தார். இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக விளையாட்டு மன்ற உறுப்பினராகவும், இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தின் மத்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். குடியரசு தின அணிவகுப்பின் போது அகில இந்திய அளவில் சிறந்த தேசிய மாணவர் படை வீரராகவும், 1971 ஆம் ஆண்டில் பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறந்த தேசிய மாணவர்படை வீரராகவும் ஆனார். 1978 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை பிலாசுபூரில் இளைஞர் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். 1978 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியின் ஜெயில் பரோ அந்தோலன் இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டார். அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக உள்ளார்.[3]

முதலில் 1985 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1993,1998 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழுவின் தலைவராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை சட்டம், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு, ஆயுர்வேதம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இணை அமைச்சராக இருந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டு மார்ச் முதல் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Naina Deviji Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2022.
  2. "Ram Lal Thakur(Indian National Congress(INC)):Constituency- HAMIRPUR(HIMACHAL PRADESH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  3. "Hon'ble Member Legislative Assembly". hpvidhansabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 21 August 2022.
  4. Official Profile of Ram Lal thakur @ hpvidhansabha.nic.in பரணிடப்பட்டது 9 சூலை 2006 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_லால்_தாகூர்&oldid=3935534" இலிருந்து மீள்விக்கப்பட்டது