இராயபுரம் தீக்கோவில்
இராயபுரம் தீக்கோயில் (ஆங்கிலம்: Royapuram fire temple) சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள ஒரு பார்சி மதக் கோயிலாகும். இதை யால் பிரோச் கிளப்வாலா தார் இ மெகர் என்றும் அழைப்பர். இது 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரோச் கிளப்வாலா மற்றும் சார்தோசுடி அஞ்சுமான் மூலம் நன்கொடையாகப் பெற்று கட்டப்பட்டது உலகின் 177 ஒற்றை தீக்கோயில்களில் ராயபுரம் தீக்கோயிலும் ஒன்றாகும்.[1] இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடக்களிலும் பார்சி தீக்கோவில்கள் உள்ளன.[2] கட்டப்பட்டதிலிருந்து கோவிலில் உள்ள நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை குருமார்களால் பூசை செய்து தொடர்ந்து பற்றவைக்கப் வைக்கப்படுகிறது.[3]
இராயபுரம் தீக்கோயில் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சென்னை, இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1910 |
செயற்பாட்டு நிலை | செயல்பாட்டில் |
வரலாறு
தொகுகூர்கிலிருந்து ஆறு பார்சிகளும், இரண்டு குருமார்களும் கொண்ட குழு ஒன்று 1795 மற்றும் 1809 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முதன்முதலில் சென்னை வந்தது. அவர்கள் சென்னை ராயபுரம் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரே உள்ள பகுதியில் நிலம் வாங்கினர். 1906 வரை கிட்டத்தட்ட நூறான்டுகளாக இப்பகுதியில் அலுவலக ரீதியாக பார்சி இனத்தவர்களுக்கென குருமார்களோ வழிபாட்டுத் தலமோ தீக்கோயில் கட்டப்படும் முன்புவரை இங்கு ஏற்படுத்தப்படவில்லை.[4] 1887 ஆம் ஆண்டு முதல், மதராஸ் பார்சி பஞ்சாயத்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தனது உறுப்பினர்களிடமிருந்து ஒரு இயங்கு நிதிக்கான பங்களிப்பாக வசூலிக்கத் தொடங்கியது. முக்கியமாக பூசாரிக் குழுக்களை பராமரிக்கவும், வழிபாட்டுக்கென ஒரு இடத்தை நிறுவவும் திட்டமிட்டது. இந்த நிதிக்காக 1896 மும்பையில் இருந்த சர் தின்ஷா பெட்டிட் என்பவர் தனது பங்களிப்பாக ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை நல்கினார். பின்னர் பார்சி சமூகம் ராயபுரம் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கியது, அங்கு அச்சமூகத்தினர் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இடங்களை வாங்கி விரிவு செய்தனர் எனினும், இந்த நிலத்தில் கோவில் கட்டும் பணியானது தாமதமானது.[2]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mathai, Kamini (12 July 2010). "Parsis go all out to celebrate milestone in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Parsis-go-all-out-to-celebrate-milestone-in-Chennai/articleshow/6156672.cms.
- ↑ 2.0 2.1 Muthiah, S. (4 July 2010). "Madras Miscellany: The century-old Parsi temple". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-the-centuryold-parsi-temple/article499975.ece. பார்த்த நாள்: 27 Apr 2014.
- ↑ Mathai, Kamini (12 July 2010). "Parsis go all out to celebrate milestone in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Parsis-go-all-out-to-celebrate-milestone-in-Chennai/articleshow/6156672.cms. பார்த்த நாள்: 24 Apr 2014.
- ↑ "Parsi community celebrates 100 years of fire temple". The Hindu (Chennai: The Hindu). 11 July 2010 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100714233635/http://www.hindu.com/2010/07/11/stories/2010071162800500.htm. பார்த்த நாள்: 24 Apr 2014.