இராய் லீமா
இராய் லீமா அல்லது இரீமா என்பது பண்டைய காங்க்லீபாக்கின் ( பழமையான மணிப்பூர் ) மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள ஒரு தெய்வம். நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தெய்வீக பெண் உருவம் ஆவார். [1] [2] [3] [4] நோய்களின் பொறுப்பாளராகவும் கருதப்படுகிறாள். [5]
இராய் லீமா | |
---|---|
லைரெம்பிகள்-இல் ஒருவர் | |
இராய் லீமா | |
அதிபதி | நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைன் கடவுள் |
வேறு பெயர்கள் |
|
எழுத்து முறை | |
வகை | மெய்டேய் இனம் |
இடம் | நரகம் |
துணை | இராய் நிங்தௌ |
சகோதரன்/சகோதரி | |
நூல்கள் | புயாக்கள் |
சமயம் | பண்டைய மணிப்பூர் |
விழாக்கள் | இலாய் அரோபா |
அவர் இராய் நிங்தோவின் (அதாவது, தண்ணீரின் ராஜா ) மனைவி. இரண்டு த்ய்வங்களுமே நீர்நிலைகளின் தெய்வீக ஆவிகளாகக் கருதப்படுகின்றன. [6]
புராணம்
தொகுஇராய் லீமா, ஹெய்போக் நிங்தோவின் மகளும் ஹெய்போக் சிங்கின் இளவரசியும் ஆவார். அவரது தந்தை மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்வதில் வல்லவர். இராய் லீமா தனது அசாதாரண அழகுக்காக அறியப்படுகிறார். ஒரு நாள், லிவா ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். குமான் வம்சத்தின் மன்னர் குவாக்பா அவரைக் கண்டு காதல் கொண்டார். தன் காதலை இராய் லீமாவிடம் வெளிப்படுத்தினார். பெற்றோரின் விருப்பமே தன் விருப்பமாக இருக்கும் என்று லீமா பதிலளித்தார். எனவே, மன்னர் குவாக்பா தனது குடிமக்களிடம் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஹெய்போக் நிங்தோவுக்கு பல பரிசுகளை வழங்கினர். [7] மன்னர் குவாக்பா இராய் லீமாவை அவரது தந்தை ஒப்புக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். அவரது தந்தை நிராகரித்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார். குவாக்பாவின் ஆணவத்தைப் பார்த்த ஹெய்போக் நிங்தோ பரிசுகளையெல்லாம் கல்லாக மாற்றினார். இதைக் கண்ட குவாக்பாவின் ஆதரவாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். குவாக்பா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். [8]
ஒரு நாள், குவாக்பா மன்னன் தேரா செடியின் ( பாம்பாக்ஸ் மலபாரிகம் ) வேரின் சாற்றைக் குடித்து போதையில் மயங்கினார். இராய் லீமாவை சந்திக்க விரும்பினார். எனவே, அவர் ஒரு இயாங் படகில் சவாரி செய்து அவள் இடத்திற்குச் சென்றார். அவர் வருவதைப் பார்த்து அவள் பக்ரா சிங் மலைக்கு ஓடிவிட்டாள். குவாக்பா அவளை துரத்தினான். இவற்றையெல்லாம் பார்த்த ஹெய்போக் நிங்தோ, ஹியாங் படகை கல்லாகவும், துடுப்பை மரமாகவும் மாற்றினார். [8] கோபமடைந்த குவாக்பா அவரைக் கொல்ல ஹெய்போக் நிங்தோவை நோக்கி ஓடினார். பின்னர், ஹெய்போக் நிங்தோ குமான் குவாக்பாவை ஒரு கல்லாக மாற்றினார். இராய் லீமா இதையெல்லாம் கண்டு அப்பாவுக்காக பயந்தாள். அவள் தந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
அவள் பக்ரா சிங்கைக் கடந்து, லிவா நதியைக் கடந்து சரங்தேம் லுவாங்பாவின் வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டின் தானியக் கிடங்கிற்குள் ஒளிந்து கொண்டாள். சாரங்தேம் லுவாங்பாவும் அவரது மனைவி தோய்திங்ஜாம் சானு அமுரேயும் வீட்டை விட்டு வயலுக்குப் புறப்பட்டபின், இராய் லீமா தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். இதற்கிடையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள். இருவரும் வீடு திரும்பியதும், மீண்டும் தலைமறைவானாள். [8] தம்பதிகள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இது தினமும் நடந்தது. எனவே, ஒரு நாள், அந்த நபர் வழக்கத்தை விட முன்னதாகவே வீடு திரும்பினார். அவர் உண்மையைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் இராய் லீமாவின் அருகில் வந்தபோது, அவள் தானியக் கிடங்கின் கீழே மறைந்துவிட்டாள். அவர் களஞ்சியத்தின் கீழ் பார்த்தும் அவரால் எதையும் காண இயலவில்லை. எனவே, அவர் தனது குல உறுப்பினர்கள் அனைவருடனும் இதைப் பற்றி விவாதித்தார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால் அவளைக் காணவில்லை. [8]
சாரங்தேம் லுவாங்பாவின் கனவில் இராய் லீமா தோன்றி, தான் அவனது குலத்தில் இணைக்கப்பட்டு அவனுடைய மகளாக மாறியதாகக் கூறினாள். இந்த விஷயம் நிங்தௌஜா வம்சத்தின் மன்னர் சென்பி கியாம்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க ராஜா மைபாஸ் மற்றும் மைபிகளை அனுப்பினார். அந்த மர்மப் பெண் தெய்வம் என்றும் அவளை வணங்க வேண்டும் என்றும் பரிசோதகர்கள் கூறினர். கியாம்பா மன்னரும் லுவாங்பாவை அவ்வாறு செய்யச் சொன்னார். அந்த ஆண்டு முதல், இராய் லீமா ஒரு தெய்வமாக வணங்கப்பட்டார். [9]
லுவாங்பா இராய் லீமாவை முதன்முதலில் பார்த்த நாள் , லாம்டா (லம்டா) மாதத்தின் மெய்தேய் சந்திர மாதத்தின் முதல் திங்கட்கிழமை ஆகும். மேலும் மைபாக்கள் மற்றும் மைபிகள் வந்த நாள் லாம்தாவின் (லாம்டா) முதல் செவ்வாய் கிழமை. இன்றும், மன்னர் சென்பி கியாம்பா (கி.பி. 1467-1508) காலத்திலிருந்து, சாரங்தேம் குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தேவியைப் போற்றும் வகையில் பெரும் விருந்து ( சக்லென் கட்பா ) நடத்துகின்றனர். பின்னர், இரா லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்று அறியப்பட்டார்.
வழிபாடு
தொகுநீரூற்று, குளம், நீரோடை ஆகியவற்றில் குளித்த பிறகு ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அந்த நபரை நீர் ஆவிகள் (இராய் லீமா மற்றும் இரை நிங்தோவ்) பிடித்ததாக மக்கள் நம்பினர். மீண்டும் நலம் பெற, மக்கள் இரு தெய்வங்களையும் வழிபடுகின்றனர். இதற்காக, மைபாக்கள் சடங்குகளையும் செய்கிறார்கள். பிரசாதத்தில் 2 முட்டைகள் மற்றும் அரிசி பசை நிரப்பப்பட்ட 7 மூங்கில் பாத்திரங்கள் அடங்கும். தாடூ மக்களும் தெய்வங்களை மிகவும் மதிக்கிறார்கள். அவர்கள் பல காட்டு பலிகளைச் செய்கிறார்கள். இச்சடங்கில் ஒரு வெள்ளைக் கோழி, ஒரு பன்றி, ஒரு நாய் அல்லது ஒரு ஆடு பலியாக இருக்கலாம்.
மற்ற தெய்வங்களுடன் அடையாளம் காணுதல்
தொகுஇராய் லீமா ( இரீமா ) லீமாரெலின் (லீமாரென்) தெய்வீக வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மிக உயர்ந்த தாய் பூமி தெய்வமாக வனங்கப் படுகிறது. [10] அவர் இமோயினு தெய்வத்தின் ஒரு வடிவமாகவும் விவரிக்கப்படுகிறார். [11]
இரை லீமா ஹியாங்தாங் லைரெம்பி என்றும் அழைக்கப்படுகிறார். கிங் கரிப் நிவாஜ் ( பாம்ஹெய்பா என்றழைக்கப்படும்) ஆட்சியின் போது, ஹியாங்தாங் லைரெம்பி தெய்வம் இந்து தெய்வமான காமாக்யா ( துர்காவின் ஒரு வடிவம்) ஆக மாற்றப்பட்டது. துர்கா பூஜையின் 3வது நாள் "போர் நுமித்" (அதாவது நல்ல நாள்) என்று அனுசரிக்கப்படுகிறது. [12] [13]
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Neelabi, sairem (2006). Laiyingthou Lairemmasinggee Waree Seengbul. p. 99.
- ↑ Gassah, L. S. (1998). Traditional Institutions of Meghalaya: A Case Study of Doloi and His Administration.
- ↑ Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture.
- ↑ Parratt, Saroj Nalini (1997). The Pleasing of the Gods: Meitei Lai Haraoba. Vikas Publishing House. ISBN 978-81-259-0416-8.
- ↑ T C Das (1945). The Purums 1945. p. 263.
- ↑ T C Das (1945). The Purums 1945. p. 247.
- ↑ Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). p. 674. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). p. 675. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ name="Lisam 2011 676">Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). p. 676. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
- ↑ name="Gassah 1998">Gassah, L. S. (1998). Traditional Institutions of Meghalaya: A Case Study of Doloi and His Administration (in ஆங்கிலம்). Regency Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86030-49-3.Gassah, L. S. (1998). Traditional Institutions of Meghalaya: A Case Study of Doloi and His Administration. Regency Publications. ISBN 978-81-86030-49-3.
- ↑ name="Devi">Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-359-72919-7.Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture. ISBN 978-0-359-72919-7.
- ↑ Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). p. 676. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.). p. 676. ISBN 978-81-7835-864-2.
- ↑ Noni, Arambam (2015-10-16). Colonialism and Resistance: Society and State in Manipur (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-27066-9.
- ↑ "Laihui Ensemble Manipur – Phou-oibi, the Rice Goddess to perform at Esplanade Theatre Studio Singapore". www.manipur.org.
- ↑ "Phou-Oibi, the Rice Goddess by Laihui Ensemble". sgmagazine.com.
- ↑ "Phouoibi Shayon to be shown at Shankar : 01st apr17 ~ E-Pao! Headlines". e-pao.net.
- ↑ "Phouoibi Shayon to be shown at Shankar – Manipur News".
- ↑ Gurumayum, Maheshwar. "Film Release - Imphal Times". www.imphaltimes.com.