இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்

இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர் (Ralph Asher Alpher) (பிப்ரவரி 3, 1921 – ஆகத்து 12, 2007)[1][2] ஓர் அமெரிக்க வானியலாளரும் அண்டவிய்லாளரும் ஆவார்.

இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்
Ralph Alpher (cropped).jpg
பிறப்பு3 பெப்ரவரி 1921
வாசிங்டன்
இறப்பு12 ஆகத்து 2007 (அகவை 86)
ஆஸ்டின்
படித்த இடங்கள்
  • Theodore Roosevelt High School
பணிவானியல் வல்லுநர், இயற்பியலறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், வானியற்பியலாளர்
வேலை வழங்குபவர்

இளமையும் கல்வியும்தொகு

ஆல்ப்பர் பேலோருசியா, விதப்சுக் எனும் இடத்தில் இருந்து புலம்பெயர்ந்த யூதரான சாமுவேல் ஆல்ப்பரின் மகன் ஆவார். இவரது தாயார் உரோசு ஆவார். தாயார் வயிற்றுப் புற்றால் 1938 இல் இறந்துவிட்டார்.எனவே தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இவர் தியோடோர் உரூசுவெல்ட் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை தம் 15 ஆம் அகவையில் முடித்தார். இவர் பள்ளி இளம் அலுவலர் பயிற்சிச் சாரணப்படையின் படைமேலராகவும் கட்டளையாளராகவும் விளங்கினார். இவர் பள்ளியில் அரங்கு மேலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். இது குடுமப வருவாய்க்குப் பெரிது உதவியுள்ளது. இவர் அப்போது குறுக்கெழுத்துப் பயிற்சியும் பெற்றுள்ளார். 1937 இல், இவர் அமெரிக்க புவி இயற்பியலொன்றியத்தின் இயக்குநருக்குக் குறுக்கெழுத்தாளராகப் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு