இரா. குமரகுரு

தமிழக அரசியல்வாதி

இரா. குமரகுரு  (R. Kumaraguru) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினைச்

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் முதலில் தமிழ்நாட்டின் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தினைத் தோல்வியுற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் 5,256 வாக்கு மற்றும் 2.17% வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

வகித்த பிற பதவிகள்

தொகு

பணிகள்

தொகு

இவர் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கும் போது உளுந்தூர்பேட்டையில் திருப்பதியின் மறு உருவில் சின்ன திருப்பதி கோயில் உருவாக்க சொந்த நிலமும் வழங்கி கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்.[2]

குடும்பம்

தொகு

இவர் ஜூலை 30, 1961 தேதி அன்று தமிழ்நாட்டில் திருப்பெயர் அஞ்சல் ஏ.சாத்தனூர் ஊராட்சியில் எடைக்கல் கிராமத்தில் இராமசாமி என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவி பெயர் மயில்மணி. இவருக்கு கு. நமச்சிவாயம் என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.

போட்டியிட்டத் தேர்தல்கள்

தொகு
தேர்தல் தொகுதி முதலிடம் கட்சி முடிவு சதவீதம் % வாக்குகள் இரண்டாமிடம் கட்சி சதவீதம் % வாக்குகள் குறிப்பு
2006 திருநாவலூர் இரா.குமரகுரு அதிமுக வெற்றி 45.49 57,235 வி. எசு. வீரபாண்டியன் திமுக 40.57 51,048 [3]
2011 உளுந்தூர்பேட்டை இரா.குமரகுரு அதிமுக வெற்றி 60.09 114,794 முகமது யூசுப் விசிக 32.08 61,286 [4]
2016 உளுந்தூர்பேட்டை இரா.குமரகுரு அதிமுக வெற்றி 36.04 81,973 ஜி. ஆர். வசந்தவேல் திமுக 34.21 77,809 [5]
2021 உளுந்தூர்பேட்டை ஏ.ஜே.மணிக்கண்ணன் திமுக வெற்றி 47.17 115,451 இரா.குமரகுரு அதிமுக 45.00 110,195 [மேற்கோள் தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu.
  2. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tn-mla-donates-land-316-cr-to-ttd-to-build-temple/article33771504.ece
  3. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 12 May 2006.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._குமரகுரு&oldid=3527458" இலிருந்து மீள்விக்கப்பட்டது