இரா. கோபால்

எழுத்தாளர், பத்திக்கையாளர்

இரா. கோபால் அல்லது நக்கீரன் கோபால்( பிறப்பு: 10 ஏப்ரல், 1959[1]), தமிழகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் வார இதழ் வெளியீட்டாளர்.

நக்கீரன் கோபால்
இரா. கோபால்
இரா. கோபால்
பிறப்பு1959
அருப்புக்கோட்டை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
காலம்1988 - தற்போது வரை
கருப்பொருள்அரசியல், திரைப்படம் மற்றும் பல
குறிப்பிடத்தக்க படைப்புகள்வீரப்பனுடன் தொடர் நேர்காணல்
இணையதளம்
http://www.nakkheeeran.com

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் வேளாளர் குடியில் பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சந்தன மரக் கடத்தல் வீரப்பன் இருக்கும் இடத்தை மறைத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். கோபால், வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதால், பிரபல்யமானார். இவர் பல்வேறு நபர்களை வீரப்பன் கடத்திய போது, தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.[2][3][4][5][6][7]

சர்ஃபாசி சட்டத்தின் கீழ் கோபாலின் சொத்துக்கள்

தொகு

நக்கீரன்கோபால் சென்னை இந்தியன் வங்கியில் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பிச் செலுத்த இயலாத காரணத்தால், கீழ் இந்தியன் வங்கி, நக்கீரன் கோபாலுக்கு 60 நாட்களுக்குள் வட்டியுடன் கடனை கட்ட 29 டிசம்பர் 2021 அன்று எச்சரிக்கை அறிவிக்கை அனுப்பியது. 31 ஆகஸ்டு 2022 அன்று நக்கீரன் கோபால் இந்தியன் வங்கியில் பெற்ற கடனில் ரூபாய் 19.26 கோடி தவணை தவறி நிலுவையாக உள்ளது. நக்கீரன் கோபால் கடன் தொகையைச் செலுத்தத் தவறினால், அவரது அடமானம் வைக்கப்பட்ட சொத்துகள், 2002 நிதிச் சொத்துக்களைப் பாதுகாத்தல் & மறுகட்டமைத்தல் & பாதுகாப்பு அமலாக்கச் சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபால் வங்கிக்கு பிணையாக கொடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 0.99 ஏக்கர் நிலம் மற்றும் அந்நிலத்தில் உள்ள 37,4000 சதுர அடி கட்டிடம் வங்கி பறிமுதல் செய்ய வாய்ப்புள்ள்து.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "[[நக்கீரன்]] இணையத்தில்". Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  2. "A tough bargain". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  3. "A mission on hold". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  4. "One hundred days of torment". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  5. "Veerappan as `Robin Hood'". Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  6. "Nakkeeran Gopal coming out of the Central jail in Chennai on December 20, 2003". Archived from the original on செப்டம்பர் 29, 2011. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Charge sheet submitted in Nakkeeran Gopal case". Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  8. Self-styled Journo ‘Nakkheeran’ Gopal In Soup For Not Repaying ₹19.26 Cr Loan

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கோபால்&oldid=4050517" இலிருந்து மீள்விக்கப்பட்டது