இரிக்கார்டோ ஜியாக்கோனி

வான்அறிவியலாளர்

இரிக்கார்டோ ஜியாக்கோனி (Riccardo Giacconi, அக்டோபர் 6, 1931 – டிசம்பர் 9, 2018) ஓர் அமெரிக்க நோபல் பரிசு பெற்ற வானியற்பியலாளர் ஆவார். இவர் X-கதிர் வானியலை உருவாக்கினார். இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இரிக்கார்டோ ஜியாக்கோனி
Riccardo Giacconi
பிறப்பு(1931-10-06)6 அக்டோபர் 1931
செனோவா, இத்தாலி
இறப்பு9 திசம்பர் 2018(2018-12-09) (அகவை 87)
சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்இத்தாலி
அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்
கல்வி கற்ற இடங்கள்மிலான் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவானியற்பியல்
விருதுகள்எலியட் கிரெசன் விருது (1980)
வானியற்பியலுக்கான டானி ஐன்மன் பரிசு (1981)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2002)

வாழ்க்கை

தொகு

இவர் இத்தாலியில் ஜெனோவாவில் பிறந்தார்.இவர் வானியற்பியல் ஆய்வு செய்ய, அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் முன்பு மிலான் பல்கலைக்கழகத்தின் முந்தைய இலாரியா பட்டத்தைப் பெற்றார்.

புவியின் வளிமண்டலம் அண்ட X-கதிரை உட்கவர்ந்துவிடுவதால், X-கதிர் வானியலுக்கு விண்வெளியில் அமைந்த தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. இச்சிக்கலுக்கு தீர்வு கான முனைந்த கியாக்கோனி, X-கதிர் வானியலுக்கான தனித்த கருவிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டார்;இவற்றில் ஏவூர்தியக ஒற்றி அல்லது காணிகளை 1950 களிலும் 1960 களிலும் முதல் X-கதிர் வானியல் செயற்கைக்கோளான உகுருவை 1970 களிலும் வடிவமைத்து உருவாக்கினார்.இவரது முன்னோடி ஆராய்ச்சிகள் 1978 இல் அய்ன்சுட்டீன் வான்காணகத்தில் தொடர்ந்தன. அங்கேயும் பின்னர் சந்திரா X-கதிர் வான்காணகத்திலும் முதல் X-கதிர்வழிப் படம் எடுக்கும் தொலைநோக்கியை வடிவமைத்தார். அது விண்வெளியில் 1999 இல் நிறுவப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறது. இவர் வானியலின் பிற புலங்களிலும் தன் புலமையை நிலைநாட்டியுள்ளார். இவர் பின்னர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் முதல் இயக்குநர் ஆனார். இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் இயக்க மையத்தின் இயக்குநரும் ஆனார்.

இவர் மசாட்டோழ்சி கோழ்சிபா, இரேமாண்டு டேவிசு இளவல் ஆகியோருடன் இணைந்து 2002 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார். இப்பரிசு இவருக்கு "அண்ட X-கதிர்வாயில்களைக் கண்டறிய உதவிய இவரது வானியற்பியலின் முன்னோடி ஆராய்ச்சிக்காகத் தரப்பட்டது".[1]

இவர் (1982-1997) கால இடைவெளியில் இயற்பியல், வானியல் பேராசிரியராகவும் 1998 முதல் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேராசிரிராகவும் இருந்தார். இப்போது பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார். இவர் (1993=1999) கால இடைவெளியிலைரோப்பிய தென் வான்காணகத்துக்குப் பொது இயக்குநராக இருந்துள்ளார். இவர் அண்மையில் நாசாவின் சந்திரா கதிர் வான்காணகத்தின்சாந்திரா ஆழ்புல- தென் திட்ட முதன்மை புலனாய்வாளராக உள்ளார்.

தகைமைகளும் விருதுகளும்

தொகு
  • வானியலுக்கான எலன் பி, வார்னர் பரிசு (1966)
  • புரூசு பதக்கம் (1981)[2]
  • என்றி மோரிசு இரசல் விரிவுரைத்தகைமை (1981)
  • கைன்மன் வானியற்பியல் பரிசு (1981)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1982)
  • இயற்பியலில் வுல்ஃப் பரிசு (1987)
  • இயற்பியலில் நோபல் பரிசு (2002)
  • தேசிய அறிவியல் பதக்கம் (2003)
  • கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (2004)
  • குறுங்கோள் 3371 ஜியாக்கோனி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிக்கார்டோ_ஜியாக்கோனி&oldid=2789227" இலிருந்து மீள்விக்கப்பட்டது