இரிடியம்(V) புளோரைடு
இரிடியம்(V) புளோரைடு (Iridium(V) fluoride) என்பது IrF5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் சேர்ந்த இச்சேர்மம் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலாக நீல் பார்ட்லெட் என்பவரால் கண்டறியப்பட்டது[1]. அதிக வினைத்திறனுள்ள மஞ்சள் நிறத் திண்மமான இச்சேர்மம் குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் படிக அமைப்பு நான்கு பகுதிகளால் ஆனது. Ir4F20 சேர்மமானது எண்முக இரிடியம் அணுக்களின் ஒருங்கிணைப்பால் அமைந்துள்ளது[2]. RuF5 மற்றும் OsF5 சேர்மங்களின் படிக அமைப்புகளின் வடிவத்தை இவ்வடிவமும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. IrF6 சேர்மத்தை கட்டுப்படுத்தப்பட்ட சிதைவுக்கு உள்ளாக்கினால் இரிடியம்(V) புளோரைடு தயாரிக்கலாம்[2]. அல்லது, IrF6 சேர்மத்தை நீரற்ற HF இல் சிலிக்கான் தூள் அல்லது H2 சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்[3].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரிடியம் ஐம்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
14568-19-5 | |
பண்புகள் | |
IrF5 | |
வாய்ப்பாட்டு எடை | 287.209 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் திண்மம் |
உருகுநிலை | 104.5 °C (220.1 °F; 377.6 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | ரோடியம்(V) புளோரைடு, ஒசுமியம் ஐம்புளோரைடு, பிளாட்டினம்(V) புளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | இரிடியம்(IV) புளோரைடு, இரிடியம் அறுபுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Neil Bartlett and P. R. Rao (1965). "Iridium pentafluoride". Chem. Commun. (12): 252–253. doi:10.1039/C19650000252.
- ↑ 2.0 2.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Paine, Robert T.; Asprey, Larned B. (1975). "Reductive syntheses of transition metal fluoride compounds. Synthesis of rhenium, osmium, and iridium pentafluorides and tetrafluorides". Robert T. Paine, Larned B. Asprey 14 (5): 1111–1113. doi:10.1021/ic50147a030.