ரோடியம்(V) புளோரைடு

வேதிச் சேர்மம்

ரோடியம்(V) புளோரைடு (Rhodium(V) fluoride) என்பது RhF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

ரோடியம்(V) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(V) புளோரைடு
இனங்காட்டிகள்
41517-05-9
InChI
  • InChI=1S/5FH.Rh/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: AUMCJABXDMCEGV-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129730862
SMILES
  • F[Rh](F)(F)(F)F
பண்புகள்
F5Rh
வாய்ப்பாட்டு எடை 197.90 g·mol−1
தோற்றம் சிவப்பு திண்மம்
அடர்த்தி 3.95 கி செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சாய்வு
புறவெளித் தொகுதி P21/a
Lattice constant a = 12.338, b = 9.9173, c = 5.5173
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ரோடியம்(III) புளோரைடை 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரினேற்றம் செய்து ரோடியம்(V) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[1]

பண்புகள் தொகு

சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக ரோடியம்(V) புளோரைடு காணப்படுகிறது. காடமைப்பில் ரோட்டியம் மையங்கள் எண்முகங்கள் கொண்டிருப்பதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ருத்தேனியம் ஐம்புளோரைடு, ஒசுமியம் ஐம்புளோரைடு, மற்றும் இரிடியம்(V) புளோரைடு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பையே ரோடியம்(V) புளோரைடும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நாற்படிகளாகும். அதாவது இவை [MF5]4 மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளன. பாலம் அமைக்கும் புளோரைடு ஈந்தணைவிகளுக்கான M-F தூரங்கள் பொதுவாக 0.2 Å அளவுக்கும் அதிகமாக இருக்கும். ரோடியம்(V) புளோரைடில் இத்தூரம் சராசரியாக 1.999(4) மற்றும் 1.808(8) ஆகும். Rh-F-Rh பிணைப்புகளிடையேயான கோண அளவும் சராசரியாக 135° அளவாக உள்ளது.[2] இதனால் ஒரு முரட்டுத்தனமான கட்டமைப்பிற்கு வழியேற்படுகிறது. மாறாக நையோபியம், தாண்டலம், மாலிப்டினம், தங்குதன் ஐம்புளோரைடுகளின் M-F-M மையங்கள் நேரியல் வடிவில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Holloway, J. H.; Rao, P. R.; Bartlett, Neil (1965). "Quinquevalent rhodium compounds: RhF5 and CsRhF6". Chemical Communications: 306–7. doi:10.1039/c19650000306. 
  2. Morrell, B. K.; Zalkin, A.; Tressaud, A.; Bartlett, N. (1973). "Crystal Structure of Rhodium Pentafluoride". Inorganic Chemistry 12 (11): 2640–p2644. doi:10.1021/ic50129a029. http://www.escholarship.org/uc/item/8rr7v0p0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(V)_புளோரைடு&oldid=3388754" இலிருந்து மீள்விக்கப்பட்டது