இரினா மெல்னிகோவா

இரினா மெல்னிகோவா (Iryna Melnykova) (24 அக்டோபர் 1918 - 3 நவம்பர் 2010) சுலோவாக்கியா மற்றும் செக் குடியரசின் உக்ரேனிய வரலாற்றாசிரியரும், வரலாற்று அறிவியல் முனைவரும், உக்ரைனின் தேசிய அறிவியல் கழகத்தின் தொடர்புடைய உறுப்பினருமாவார். இவரது ஆராய்ச்சி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றையும் உள்ளடக்கியது. குறிப்பாக போர்க் காலத்தின் மீது கவனம் செலுத்துகிறது.

வாழ்க்கை தொகு

இரினா மெல்னிகோவா, 24 அக்டோபர் 1918 இல் செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள மெனாவில் பிறந்தார். கீவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் (1940). இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஜெர்மன்-சோவியத் இராணுவ மோதலின் தொடக்கத்துடன், கசக்கஸ்தானின், ஷிம்கென்ட் நகருக்கு வெளியேற்றப்பட்டார். அங்கு தெற்கு கசாக் கல்வி நிறுவனத்தில் (1941-1942) கட்டாயக் குடியேற்றத்தில் வரலாற்றைக் கற்பிக்கத் தொடங்கினார்.[1]

மெல்னிகோவா, கிசைல்-ஓர்டாவில் (துவா) ஐக்கிய உக்ரேனிய மாநில பல்கலைக்கழகத்தின் பட்டதாரி பள்ளியில் படித்தார். கீவில் "1725-1740 இல் உக்ரைன் மீதான உருசிய அரசாங்கத்தின் கொள்கை" (மேற்பார்வையாளர் ஏ. வெவெடென்ஸ்கி) (1946) என்ற தனது ஆய்வுக் கட்டுரையை அளித்தார். ஆனால் அதன் பிறகு போஹேமியனிசம் மற்றும் மேற்கத்திய சிலாவிக் படிப்புகளில் தன்னை அர்ப்பணிக்க உக்ரேனை விட்டு வெளியேறினார்.

மெல்னிகோவா உக்ரேனிய வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி லிகோலட் என்பவரை மணந்தார்.[2]

ஆராய்ச்சி தொகு

1947 முதல் 1959 வரை சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கழகத்தின் (மாஸ்கோ) சிலோவாக்கிய ஆய்வுகள் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கு சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாக இணைக்கப்பட்ட செக் குடியரசு, சிலோவாக்கியா மற்றும் சாகர்பாசியாவின் அரசியல் வரலாற்றைப் படிக்கத் தொடங்கினார்.[3]

1957 முதல், மெல்னிகோவா கீவில், சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கழகத்தின் வரலாற்று நிறுவனத்தில் பணியாற்றினார்.[3] அங்கு, 1961 இல், "முதலாளித்துவத்தின் தற்காலிக பகுதி உறுதிப்படுத்தல் காலத்தில் (1924-1929) செக்கோசிலோவாக்கியாவில் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை அளித்தார்.[3] இன்றுவரை, உக்ரைனில் எழுதப்பட்ட 1920 களின் செக் அரசியல் கட்சிகளின் வரலாற்றில் இந்ப் பணி மிகவும் முழுமையானதாக உள்ளது.[4]

1965 - 1988 இல், சர்வதேச உறவுகளின் சோசலிச வரலாற்றுத் துறையின் தலைவராகவும், 1988 முதல் - தலைமை ஆராய்ச்சி கூட்டாளியாகவும் இருந்தார்.[5] 1973 இல் இவர் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கழகத்தின் (1973) தொடர்புடைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970 களில் மெல்னிகோவா ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் ஒரு முன்னணி அறிஞராக இருந்தார். சிலோவாக்கியா மற்றும் செக் குடியரசின் வரலாற்றில் ஒரு சிலரில் ஒருவர். பல்கேரியா, செக் குடியரசு மற்றும் போலந்தின் அறிவியல் கழகத்தின் தொடர்புடைய வரலாற்று நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை நிறுவினார். உக்ரேனிய சுதந்திரத்தை மீட்டெடுத்த பிறகு, நவீன காலங்களில் உக்ரைனின் சர்வதேச உறவுகளின் வரலாற்றைப் படிப்பதற்காக ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கினார்.[5] 2002 ஆம் ஆண்டில், "உக்ரைனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மதிப்பிற்குரிய பணியாளர்" என்ற கௌரவப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Варварцев, М.М. (2014) (in uk). Мельникова Ірина Миколаївна/Україна в міжнародних відносинах. Енциклопедичний словник-довідник.. Ін-т історії України НАН України. பக். 307-309. https://shron1.chtyvo.org.ua/Varvartsev_Mykola/Ukraina_v_mizhnarodnykh_vidnosynakh_Entsyklopedychnyi_slovnyk-dovidnyk_Vypusk_5.pdf?. 
  2. "Лихолат Андрій Васильович — Енциклопедія Сучасної України". esu.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  3. 3.0 3.1 3.2 Кривець, Н.В. (2010). "In Memoriam. Мельникова Ірина Миколаївна". Український історичний журнал 6: 228-229. http://dspace.nbuv.gov.ua/xmlui/bitstream/handle/123456789/105565/31-Krivets.pdf?sequence=1. 
  4. "МЕЛЬНИКОВА ІРИНА МИКОЛАЇВНА". resource.history.org.ua. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  5. 5.0 5.1 5.2 Віднянський, С.В. (22 June 2008). "До ювілею відомого українського історика Ірини Миколаївни Мельникової". Український історичний журнал 6: 229-231. http://history.org.ua/JournALL/journal/2008/6/22.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரினா_மெல்னிகோவா&oldid=3858868" இலிருந்து மீள்விக்கப்பட்டது