சாகர்பாசியா மாகாணம்
சாகர்பாசியா மாகாணம் (Zakarpatska Oblast), உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைநகரம் உசரோத் நகரம் ஆகும். கார்பேத்திய மலைத்தொடரில் அமைந்த சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கில் உக்ரைனின் லிவீவ் மாகாணம் மற்றும் ஐவானோ பிராங்கிவ்ஸ்க் மாகாணங்களுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.
சாகர்பாசியா மாகாணம்
Закарпатська область | |
---|---|
மாகாணம் | |
சாகர்பாட்ஸ்கா மாகாணம் [1] | |
ஆள்கூறுகள்: 48°25′N 23°17′E / 48.41°N 23.29°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட நாள் | 22 சனவரி 1946[2] |
தலைநகரம் | உசரோத் நகரம் |
அரசு | |
• ஆளுநர் | பெட்ரோ டோப்ரோமில்ஸ்கி (தற்காலிகம்)[3] |
• சாகர்பாசியா மாகாண மன்றம் | 64 உறுப்பினர்கள் |
• தலைவர் | மிகைலோ ரிவிஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,777 km2 (4,933 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 23-வது இடம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | ▼ 12,50,129 |
• தரவரிசை | 15-வது இடம் |
Demographics | |
• அலுவல் மொழி | உக்குரேனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 88-90xxx |
வட்டார குறியீடு | +380-31 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-21 |
மாவட்டங்கள் | 6 |
நகரங்கள் (மொத்தம்) | 11 |
• மண்டல நகரங்கள் | 5 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 19 |
கிராமங்கள் | 579 |
FIPS 10-4 | UP25 |
இணையதளம் | www.carpathia.gov.ua www.rada.gov.ua |
13,000 சதுர கிலோமீட்டர்கள் (5,000 sq mi) பரப்பளவு கொண்ட சாகர்பாசியா மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 23-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 15-வது இடத்தில் உள்ளது. 2001-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,54,614 ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,60,129 ஆகும்.
புவியியல்
தொகுகார்பேத்திய மலைத்தொடரின் தென்மேற்கில் 80% பகுதியில் சாகர்பாசியா மாகாணம் 12,800 km2 (4,942 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.[4] சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணத்தில் திசா ஆறு, போர்சவா ஆறு மற்றும் டெரிபிலியா ஆறுகள் பாய்கிறது..[5]இம்மாகாணத்தின் துர்குல் மலையின் சரிவில், 1,750 மீட்டர்கள் (5,740 அடி) உயரத்தில், 3,000 சதுர மீட்டர்கள் (32,000 sq ft) பரப்பளவில் நன்னீர் ஏரி உள்ளது. இதன் கோடைக்கால சராசரி வெப்பம் +21 °С (70 °F) மற்றும் குளிர்கால வெப்பம் −4 °С (25 °F) ஆக உள்ளது.
-
கார்பேத்திய மலையின் காட்சி
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
தொகுசாகர்பாசியா மாகாணத்தில் 13 மாவட்டங்கள் இருந்தது. 18 சூலை 2020 அன்று இதனை 6 மாவட்டங்களாக குறைக்கப்பட்டது.[6][7]இம்மாகாணம் 11 நகரங்கள், 579 கிராமங்கள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2016-ஆம் ஆண்டில் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 12,59,158 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 80.50% ஆகவுள்ளனர்.[8]
அங்கேரி மொழி பேசுபவர்கள் 12.1%, உருமோனிய மொழி பேசுபவர்கள் 2.6%, உருசிய மொழி பேசுபவர்க்ள் 2.5%, சுலோக்கிய மொழி பேசுபவர்கள் 1.1% மற்றும் பிற மொழிகள் பேசுபவர்கள் 08% ஆக உள்ளனர்.
இதனையும் காண்க
தொகுபடக்காட்சியகம்
தொகு-
கார்பேத்திய மலையின் ஒரு கொடுமுடி, உயரம் 2,020 மீட்டர்
-
பிக்கி மலை
-
வெரொஸ்கா ஏரி [
-
கார்பேத்திய மலை உயிர்ச்சூழல்
-
கோட்டை அரண்மனை
-
பலோனோக் அரண்மனை
மேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Today Zakarpattia became part of Ukraine. 68 year ago (Сьогодні Закарпаття увійшло до складу України. 68 років тому). 7dniv. 29 June 2013
- ↑ Zelensky sacks head of Zakarpattia region, Ukrinform (19 November 2021)
- ↑ "Geography". Zakarpattia Oblast Council (in உக்ரைனியன்). Archived from the original on 2009-04-30. பார்க்கப்பட்ட நாள் 2007-11-18.
- ↑ "Онлайн казино Космолот. Офіційний сайт, зеркало, реєстрація в Cosmolot24". Cosmolot24.in.ua. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
- ↑ "Про утворення та ліквідацію районів. Постанова Верховної Ради України № 807-ІХ." (in uk). 2020-07-18. http://www.golos.com.ua/article/333466.
- ↑ "Нові райони: карти + склад" (in Ukrainian). Міністерство розвитку громад та територій України. 17 July 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "General results of the census / National composition of population / Zakarpattia region". 2001 Ukrainian Census. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
வெளி இணைப்புகள்
தொகு- carpathia.gov.ua பரணிடப்பட்டது 2021-02-15 at the வந்தவழி இயந்திரம் — Official website of Zakarpattia Oblast Administration (in உக்குரேனிய மொழி and ஆங்கில மொழி)
- Zakarpattia Council official site பரணிடப்பட்டது 2010-11-06 at the வந்தவழி இயந்திரம் (in உக்குரேனிய மொழி)
- Zaholovok — Zakarpattia actual news(in உக்குரேனிய மொழி)
- Zakarpattia essays — All about Zakarpattia and Ukraine
- Verkhovna Rada website — Zakarpattia Oblast data
- Photos and infrastructure objects of Zakarpattia on interactive map (Ukrainian Navigational Portal)
- News from Zakarpattia (in உக்குரேனிய மொழி)
- all.zakarpattya.net — All about Zakarpattia (in ஆங்கில மொழி and உக்குரேனிய மொழி)
- mukachevo.net — Zakarpattia Oblast informational portal (in உக்குரேனிய மொழி)
- map.meta.ua — Digital map of Zakarpattia Oblast (in உக்குரேனிய மொழி)
- Zakarpattia Oblast – photographs பரணிடப்பட்டது 2007-03-19 at the வந்தவழி இயந்திரம்
- Dictionary of transcarpathian words பரணிடப்பட்டது 2014-01-18 at the வந்தவழி இயந்திரம் (in உக்குரேனிய மொழி)