லிவீவ் மாகாணம்

லிவீவ் மாகாணம் (Lviv Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கு கோடியில், போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் லிவீவ் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 24,97,750 ஆகும்.

லிவீவ் மாகாணம்
Львівська область
லிவீவ்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
Lviv in Ukraine (claims hatched).svg
நாடு உக்ரைன்
தலைநகரம்லிவீவ்
அரசு
 • ஆளுநர்மாக்சிம் கோசிட்ஸ்கி[2]
 • லிவீவ் மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அலெக்சாந்தர் ஹனுஸ்சின்
பரப்பளவு
 • மொத்தம்21,833 km2 (8,430 sq mi)
பரப்பளவு தரவரிசை17-வது இடம்
ஏற்றம்296 m (971 ft)
மக்கள்தொகை (2021)[3]
 • மொத்தம்Red Arrow Down.svg 24,97,750
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு79-82
வட்டார குறியீடு+380-32
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-46
மாவட்டங்கள்20
நகரங்கள் (மொத்தம்)44
• மண்டல நகரங்கள்9
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்34
கிராமங்கள்1849
FIPS 10-4UP15
இணையதளம்www.loda.gov.ua

புவியியல்தொகு

கார்பேத்திய மலைகள் இம்மாகாணத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் வடக்கிலிருந்து தினிஸ்டர் ஆறு மற்றும் சான் ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணத்தில் பைன் மரக்காடுகளும், நிலக்கரிச் சரங்கங்கள் அதிகம் உள்ளது.

தட்ப வெப்பம்தொகு

இம்மாகாணத்தின் கார்பேத்திய மலைப்பகுதிகளில் சனவரி மாதத்தில் சராசர் வெப்பம் −7 °C (19 °F) முதல் −3 °C (27 °F) வரை இருக்கும். சூலை மாதத்தில் சராசரி வெப்பம தினிஸ்டர் மற்றும் சான் ஆற்றுச் சமவெளிகளில் 14–15 °C (57–59 °F) வரையும், கார்பேத்திய மலைப்பகுதிகளில் 16–17 °C (61–63 °F) வரையும் இருக்கும்.

 
லிவீவ் மாகாணத்தின் மாவட்டங்கள்

மாகாண ஆட்சிப் பிரிவுகள்தொகு

லிவீவ் மாகாணம் 20 மாவட்டங்கள், 44 நகரங்கள், 34 நகர்புற குடியிருப்பு பகுதிகள், 1849 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்தொகு

இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 94.8%, உருசிய மொழி பேசுபவர்கள் 3.6% உள்ளனர்.[4]

இம்மாகாணத்தில் முதலிடத்தில் 59% பேர் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க சமயத்தினராக உள்ளனர். இரண்டாவதாக உக்ரைனிய தன்னாட்சி மரபுவழி திருச்சபையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் சிறுபான்மையாக உள்ளனர்.


படக்காட்சிகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06. 
  2. Zelensky introduces new head of Lviv Regional State Administration, Ukrinform (6 February 2020)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ua2021estimate என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Державний комітет статистики України (2004). "Національний склад населення / Львівська область" [Ukrainian Census, Lviv Oblast]. Internet Archive. September 26, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 December 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவீவ்_மாகாணம்&oldid=3431457" இருந்து மீள்விக்கப்பட்டது