இருநிக்கல் போரைடு

வேதிச் சேர்மம்

இருநிக்கல் போரைடு (Dinickel boride) Ni2B என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] நிக்கலும் போரானும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிக்கலின் போரைடு வகை சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.

இருநிக்கல் போரைடு
Dinickel boride
இனங்காட்டிகள்
12007-01-1
ChemSpider 21170791
EC number 234-494-6
InChI
  • InChI=1S/B.2Ni
    Key: WRLJWIVBUPYRTE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336854
  • [B].[Ni].[Ni]
பண்புகள்
Ni2B
வாய்ப்பாட்டு எடை 128.2 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நிக்கல் உப்புகளுடன் சோடியம் போரோ ஐதரைடு வினைபுரிவதால் இருநிக்கல் போரைடு கிடைக்கிறது. கரிமவேதியியல் தொகுப்பு வினைகளில் நிக்கல்-போரான் வினையூக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் போரைடு குறித்த கட்டமைப்பு ஆய்வுகள் எதுவும் வளர்ச்சியடையவில்லை என்றாலும் Na2.5B(sic) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு நெருக்கமாக உள்ளது.[3]

தயாரிப்பு

தொகு

சோடியம் போரோ ஐதரைடுடன் தூளாக்கப்பட்ட நிக்கலை மூடிய கொள்கலனில் சேர்த்து 670 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் இதர நிக்கல் போரைடுகளுடன் சேர்ந்து இருநிக்கல் போரைடும் உருவாகிறது. வினையில் உருவாகும் ஐதரசன் வாயு 3.4 மெகாபாசுக்கல் அளவுக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதற்கான பிரதான வினைக்கான சமன்பாடு இங்கு தரப்படுகிறது.

2NaBH
4
↔ 2NaH + B
2
H
6
2Ni + 2B
2
H
6
+ NaH ↔ Ni
2
B
+ 3BH
3
+ 2H
2
+ Na

ஆனால் நிகழும் பிற வினைகளில் மற்ற போரைடுகள் உருவாகின்றன.[4]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. T. Bjurstrom, Arkiv Kemi, Mineral. Geol., 11A, No. 5, (1933).
  2. US National Institutes of Health (2020): "Nickel boride (Ni2B)". Compound page at the NCBI PubChem site. Accessed on 2020-07-18.
  3. L. J. E. Hofer, J. F. Shultz, R. D. Panson, and R. B. Anderson (1964): "The nature of the nickel boride formed by the action of sodium borohydride on nickel salts". Inorganic Chemistry, volume 3, issue 12, pages 1783–1785. எஆசு:10.1021/ic50022a031
  4. Mahboobeh Shahbazi, Henrietta Cathey, Natalia Danilova and Ian D.R. Mackinnon (2018): "Single Step Process for Crystalline Ni-B Compounds". Materials, volume 11, issue 7, article 1259-. எஆசு:10.3390/ma11071259
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருநிக்கல்_போரைடு&oldid=3320938" இலிருந்து மீள்விக்கப்பட்டது