முந்நிக்கல் போரைடு
முந்நிக்கல் போரைடு (Trinickel boride) Ni3B என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலின் போரைடு வகை சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். நிக்கலும் போரானும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12007-02-2[1] | |
ChemSpider | 4891848 |
EC number | 234-495-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336855 |
| |
பண்புகள் | |
Ni3B | |
வாய்ப்பாட்டு எடை | 186.89 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1959 ஆம் ஆண்டு முந்நிக்கல் போரைடைக் குறித்து ஆர். புருசார்ட்டு, [2] எசு. இரந்குயிசுட்டு, [3] எல்.எச். ஆண்டர்சன், ஆர். கீசுலிங்கு ஆகியோர் விவரித்தனர். [4] கடினமான இச்சேர்மம் இரும்பு கார்பைடு படிகக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது. [5]
தயாரிப்பு
தொகுநிக்கல் போரைடு வினையூக்கியை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் முந்நிக்கல் போரைடை உற்பத்தி செய்ய முடியும். நிக்கல் அணிக்கோவையில் மணிகள் பதிக்கப்பட்டது போல முந்நிக்கல் போரைடு கிடைக்கும். நிக்கல் உப்புகளுடன் சோடியம் போரோ ஐதரைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் நிக்கல் போரைடு வினையூக்கி கிடைக்கும். [5] நிக்கல் மற்றும் போரான் தூள்களை ஒன்று சேர்த்து அழுத்தத்திற்கு உட்படுத்தினாலும் வெடியோசையுடன் முந்நிக்கல் போரைடு உருவாகும். [6]
சோடியம் போரோ ஐதரைடுடன் தூளாக்கப்பட்ட நிக்கலை மூடிய கொள்கலனில் சேர்த்து 670 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் இதர நிக்கல் போரைடுகளுடன் சேர்ந்து இருநிக்கல் போரைடும் உருவாகிறது. வினையில் உருவாகும் ஐதரசன் வாயு 3.4 மெகாபாசுக்கல் அளவுக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதற்கான பிரதான வினைக்கான சமன்பாடு இங்கு தரப்படுகிறது:
- 2NaBH
4 ↔ 2NaH + B
2H
6 - 2Ni + 2B
2H
6 + NaH ↔ Ni
2B + 3BH
3 + 2H
2 + Na
ஆனால் நிகழும் பிற வினைகளில் மற்ற போரைடுகள் உருவாகின்றன.[7]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ US National Institutes of Health (2020): "Nickel boride (Ni3B)". Compound page at the NCBI PubChem site. Accessed on 2020-07-18.
- ↑ R. Fruchart, Ann. Chim., 4, 1247 (1959).
- ↑ S. Rundquist, Acta Chem. Scand., 12, 658 (1959).
- ↑ L. H. Anderson and R. Kiessling, Acta Chem. Scand., 4, 160 (1950).
- ↑ 5.0 5.1 L. J. E. Hofer, J. F. Shultz, R. D. Panson, and R. B. Anderson (1964): "The nature of the nickel boride formed by the action of sodium borohydride on nickel salts". Inorganic Chemistry, volume 3, issue 12, pages 1783–1785. எஆசு:10.1021/ic50022a031
- ↑ Michail A. Korchagin, Dina V. Dudina, Boris B. Bokhonov, Natalia V. Bulina, Arina V. Ukhina, and Igor S. Batraev (2018): "Synthesis of nickel boride by thermal explosion in ball-milled powder mixtures". Journal of Materials Science, volume 2018, issue 19. எஆசு:10.1007/s10853-018-2290-8
- ↑ Mahboobeh Shahbazi, Henrietta Cathey, Natalia Danilova and Ian D.R. Mackinnon (2018): "Single Step Process for Crystalline Ni-B Compounds". Materials, volume 11, issue 7, article 1259-. எஆசு:10.3390/ma11071259