இருநைட்ரசன் இருபுளோரைடு

என்–என் டைபுளோரோயூரியாவுடன் அடர் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து நீரிய நிலையில் இருநைட்ரசன

இருநைட்ரசன் இருபுளோரைடு (Dinitrogen difluoride) என்பது N2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைநைட்ரசன் டைபுளோரைடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் டைநைட்ரசன் டைபுளோரைடு ஒரு வாயுவாகக் காணப்படுகிறது. 1952 ஆம் ஆண்டில் அசைடு (N3F) சேர்மத்தின் வெப்பச் சிதைவு விளைபொருளாக இது அடையாளம் காணப்பட்டது. F−N=N−F என்ற மூலக்கூற்று கட்டமைப்புடன் உள்ள இருநைட்ரசன் இருபுளோரைடு ஒருபக்க மற்றும் மாறுபக்க மாற்றிய வடிவங்கள் இரண்டிலும் காணப்படுகின்றது.

இருநைட்ரசன் இருபுளோரைடு[1]

ஒருபக்க-டைநைட்ரசன் டைபுளோரைடு (இடது) மற்றும் மாறுபக்க-டைநைட்ரசன் டைபுளோரைடு (வலது)
ஒருபக்க-டைநைட்ரசன் டைபுளோரைடு
மாறுபக்க-டைநைட்ரசன் டைபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஒருபக்க- அல்லது மாறுபக்க-டைநைட்ரசன் டைபுளோரைடு
வேறு பெயர்கள்
ஒருபக்க- அல்லது மாறுபக்க-டைபுளோரோடையசீன்
இனங்காட்டிகள்
13812-43-6 (ஒருபக்கம்) N
ChemSpider 10326121 (cis) N
InChI
  • InChI=1S/F2N2/c1-3-4-2/b4-3- (cis)
    Key: DUQAODNTUBJRGF-ONEGZZNKBY
  • InChI=1S/F2N2/c1-3-4-2/b4-3+ Y
    Key: DUQAODNTUBJRGF-ARJAWSKDSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image

(cis)

  • F\N=N\F (cis)
இனங்காட்டிகள்
13776-62-0 (மாறுபக்கம்) N
ChemSpider 4516471 (மாறுபக்கம்) N
InChI
  • InChI=1/F2N2/c1-3-4-2/b4-3+ (மாறுபக்கம்)
    Key: DUQAODNTUBJRGF-ONEGZZNKBY
  • InChI=1S/F2N2/c1-3-4-2/b4-3+ Y
    Key: DUQAODNTUBJRGF-ONEGZZNKSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image

(மாறுபக்கம்)

  • F\N=N/F (மாறுபக்கம்)
பண்புகள்
N2F2
வாய்ப்பாட்டு எடை 66.010 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 2.698 கி/லி
உருகுநிலை ஒருபக்கம்: < −195 °C (−319.0 °F; 78.1 K)
மாறுபக்கம்: −172 °செ
கொதிநிலை cis: −105.75 °C (−158.35 °F; 167.40 K)
மாறுபக்கம்: −111.45 °செ
இருமுனைத் திருப்புமை (Dipole moment) ஒருபக்கம்: 0.16 D
மாறுபக்கம்: 0 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
cis: 69.5 கியூ/மோல்
மாறுபக்கம்: 82.0 கியூ/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் அசோ சேர்மம்s
diazene
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மாற்றமைப்புகள்

தொகு

ஒருபக்க மாற்றிய அமைப்பு C2v சீரொழுங்கிலும், மாறுபக்க மாற்றிய அமைப்பு C2h சீரொழுங்கு அமைப்பிலும் உள்ளன. இவ்விரண்டு மாற்றியன்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக இடைமாற்றம் செய்யலாம். ஆனால் இவற்றை தாழ்வெப்பநிலை பகுதிப்பிரித்தலால் மட்டுமே பிரிக்கமுடியும். மாறுபக்க வடிவம் வெப்பவியல் படி குறைவான நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். ஆனால் கண்ணாடிப் பாத்திரங்களில் இவற்றை சேகரிக்கலாம். ஒருபக்க வடிவமைப்பு இருநைட்ரசன் இருபுளோரைடு இரு வார காலத்தில் கண்ணாடியைத் தாக்கி சிலிக்கான் டெட்ராபுளோரைடு மற்றும் நைட்ரசு ஆக்சைடுகளாக உருவாகின்றன. [2]

2 N2F2 + SiO2 → SiF4 + 2 N2O

தயாரிப்பு

தொகு

இருநைட்ரசன் இருபுளோரைடு தயாரிக்கும் பல்வேறு முறைகளிலும் இருவகையான மாற்றிய வகைகளின் கலவையே உருவாகிறது. ஆனால் இவற்றைத் தனித்தனியாகவும் தயாரிக்க இயலும். என்–என் டைபுளோரோயூரியாவுடன் அடர் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து நீரிய நிலையில் இருநைட்ரசன் இருபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.இம்முறையில் 40% அதிகமாக மூன்று மடங்கு மாறுபக்க மாற்றியன் உருவாகிறது [3] டைபுளோரமீன் பொட்டாசியம் புளோரைடுடன் (அல்லது ருபீடியம் புளோரைடு அல்லது சீசியம் புளோரைடுடன்) சேர்ந்து நிலைப்புத்தன்மை இல்லாத திண்மமாக உருவாகிறது. பின்னர் இது சிதைவடைந்து டைநைட்ரசன் டைபுளோரைடாக உருவாகிறது [3].

வினைகள்

தொகு

டைநைட்ரசன் டைபுளோரைடின் ஒருபக்க மாற்றியன், ஆண்டிமனி பென்டாபுளோரைடு போன்ற வலிமையான புளோரைடு அயனி ஏற்பிகளுடன் வினைபுரிந்து N2F+ நேர்மின் அயனியாக மாறுகிறது.

N2F2 + SbF5 → N2F+[SbF6]−N2F+

நேர்மின் அயனியின் திண்மநிலையில் N=N மற்றும் N−F பிணைப்புகளின் பிணைப்பு இடைவெளி முறையே 1.089(9) மற்றும் 1.257(8) Å ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–73, 5–15, 9–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. 3.0 3.1 Sykes, A. G. (1989-07-17). Advances in Inorganic Chemistry. Academic Press. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080578828. பார்க்கப்பட்ட நாள் 21 June 2014.