இருபியூட்டைல் மக்னீசியம்
இருபியூட்டைல் மக்னீசியம் (Dibutylmagnesium) என்பது C8H18Mg என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம உலோகச் சேர்மமாகும்.[1] மக்னீசியத்தின் கரிம உலோகச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. தூய இருபியூட்டைல் மக்னீசியம் மெழுகு போன்ற திடப்பொருளாகும். வணிக ரீதியாக, இது எப்டேனில் உள்ள கரைசலாக விற்பனை செய்யப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரு-என்-பியூட்டைல் மக்னீசியம்
| |
இனங்காட்டிகள் | |
1191-47-5 | |
ChemSpider | 10659503 |
EC number | 214-736-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 70929 |
| |
பண்புகள் | |
C 8H 18Mg | |
வாய்ப்பாட்டு எடை | 138.53 |
தோற்றம் | மெழுகு போன்ற திண்மம் |
அடர்த்தி | 0.713 கி/மி.லிட்டர் - 25°செல்சியசில் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H250, H260, H314 | |
P210, P222, P223, P231+232, P260, P264, P280, P301+330+331, P302+334, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமக்னீசியம் பியூட்டைல்குளோரைடுடன் பியூட்டைல் லித்தியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து, அதைத் தொடர்ந்து மக்னீசியம் 2-எத்தில்யெக்சனோயேட்டைச் சேர்ப்பதன் மூலம் இருபியூட்டைல் மக்னீசியம் சேர்மத்தைப் பெறலாம்.[3]
மக்னீசியத்தை ஐதரசனேற்றம் செய்து தொடர்ந்து 1-பியூட்டீனுடன் வினைபுரியச் செய்வதன் மூலமாகவும் இருபியூட்டைல் மக்னீசியத்தை தயாரிக்கலாம்.[1] 2-குளோரோபியூட்டேன், மக்க்னீசியம் தூள் மற்றும் என்-பியூட்டைல் லித்தியம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் இதை தயாரிக்க முடியும்.[4]
பயன்கள்
தொகுகரிமமக்னீசியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு இருபியூட்டைல் மக்னீசியம் ஒரு வசதியான வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3][2][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sigma-Aldrich Co., Di-n-butylmagnesium solution, 1 M in ether and hexanes. Retrieved on 2018-10-28.
- ↑ 2.0 2.1 Terry L. Rathman: "Dibutylmagnesium". In: Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, doi:10.1002/047084289X.rd063
- ↑ 3.0 3.1 Alan W. Duff, Peter B. Hitchcock, et al: "'Dibutylmagnesium', a convenient reagent for the synthesis of useful organic magnesium reagents MgA2 including cyclopentadienyls, aryloxides, and amides. Preparation of Zr(C5H5)Cl3. X-ray structure of [{μ-N(SiMe)3C6H4N}(SiMe3)-o(OEt2)]2." In: Journal of Organometallic Chemistry. Issue 293 (1985), p. 271, எஆசு:10.1016/0022-328X(85)80298-9.
- ↑ "Method for preparing dibutylmagnesium" (Patent CN101362772A), retrieved via Google Patents 28 October 2018.
- ↑ Michael J. Michalczyk: "Synthesis of magnesium hydride by the reaction of phenylsilane and dibutylmagnesium." In: Organometallics. Issue 11 (1992), p. 2307, எஆசு:10.1021/om00042a055.