இருபீனைல் அலனைன்
வேதிச் சேர்மம்
இருபீனைல் அலனைன் (Diphenylalanine) என்பது அலனைன் மற்றும் பீனைலலனைன் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களைப் போன்ற இயற்கைக்கு மாறான அமினோ அமிலத்தை விவரிக்க பயன்படுத்தப்பட்டது. C15H15NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. சில நொதிகளைத் தடுக்கும் திறன் கொண்ட போலிபெப்டைடு ஒப்புமைகளின் தயாரிப்பிற்காகப் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1] நாற்தொகுதி மைய ஆக்சசோலிடினோன் வழிப்பெறுதியான 3,3-இருபீனைல்புரோப்பனாயிக் அமிலத்தை மின்னணுகவர் அமீனேற்ற வினைக்கு உட்படுத்தி இச்சேர்மத்தின் தனித்தனியான ஆடியெதிர் உருக்களை தயாரிக்க இயலும்.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-3,3-இருபீனைல்புரோப்பியானிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
149597-92-2 149597-91-1 | |
ChemSpider | 143073 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 162977 1520861 |
| |
UNII | L1ZWG54X8B H2JAP020MP |
பண்புகள் | |
C15H15NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 241.11 கி/மோல் |
தோற்றம் | திண்மம் |
உருகுநிலை | 235 °C (455 °F; 508 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபீனைலலனைன் சேர்மத்தின் வரலாற்றுப் பயன்பாடு பீனைலலனைனின் இருபெப்டைடைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Leifeng Cheng; Christopher A. Goodwin; Michael F. Schully; Vijay V. Kakkar; Goran Claeson (1992). "Synthesis and biological activity of ketomethylene pseudopeptide analogs as thrombin inhibitors". Journal of Medicinal Chemistry 35 (18): 3364–3369. doi:10.1021/jm00096a010. பப்மெட்:1527787.
- ↑ Huai G. Chen; V. G. Beylin; M. Marlatt; B. Leja; O. P. Goel (1992). "Chiral cynthesis of D- and L-3,3-diphenylalanine (Dip), unusual α-amino acids for peptides of biological interest". Tetrahedron Letters 33 (23): 3293–3296. doi:10.1016/S0040-4039(00)92070-7.