இருபுரோமின் மூவாக்சைடு

இருபுரோமின் மூவாக்சைடு (Dibromine trioxide) என்பது Br2O3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[2]. Br-O-BrO2 என்ற புரோமின் – புரோமேட்டு கட்டமைப்புடன் காணப்படும் இருபுரோமின் மூவாக்சைடு -40 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. வளைந்த மூலக்கூற்று அமைப்பின் Br-O-Br பிணைப்பின் பிணைப்புக் கோணம் 111.2° மற்றும் Br-O-BrO2 பிணைப்பின் பிணைப்பு நீளம்1.85Å. என்ற அளவுகளிலும் உள்ளன[3].

இருபுரோமின் மூவாக்சைடு
Dibromine trioxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமின் டிரையாக்சைடு
வேறு பெயர்கள்
புரோமின் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
53809-75-9 Y
பண்புகள்
Br2O5
வாய்ப்பாட்டு எடை 207.806 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சுநிற ஊசிகள்
உருகுநிலை -40° செ இல் சிதைவடைகிறது.[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஈராக்சைடு
புரோமின் முப்புளோரைடு
புரோமின் பென்டாபுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு
இருகுளோரின் ஓராக்சைடு
குளோரின் ஈராக்சைடு
அயோடின் ஈராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

வினைகள் தொகு

தாழ் வெப்பநிலையில்[2][3] இருகுளோரோ மீத்தேனில் உள்ள புரோமினுடன் ஓசோன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இருபுரோமின் மூவாக்சைடைத் தயாரிக்கலாம். காரக் கரைசல்களில் இது விகிதச்சமமாதலின்றி Br மற்றும் BrO3 ஆகப் பிரிகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 255, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2015-08-25
  2. 2.0 2.1 Henderson, K. M. Mackay; R. A. Mackay; W. (2002). Introduction to modern inorganic chemistry (6th ed.). Cheltenham: Nelson Thornes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780748764204.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. 3.0 3.1 3.2 Wiberg, Egon (2001). Wiberg, Nils (ed.). Inorganic chemistry (1st ed.). San Diego, Calif.: Academic Press. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபுரோமின்_மூவாக்சைடு&oldid=2051895" இலிருந்து மீள்விக்கப்பட்டது