இருமெத்தில் அடிப்பேட்டு

வேதிச் சேர்மம்

இருமெத்தில் அடிப்பேட்டு (Dimethyl adipate) என்பது CH2CH2CO2CH3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்று எண்ணெய் போன்ற நீர்மமாக காணப்படுகிறது. அடிபேட்டுகளின் முக்கிய வணிக ஆர்வம் நைலான்களின் உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இந்த ஈரெசுத்தர் ஒரு நெகிழியாக்கியாகவும், வண்ணப்பூச்சுகளையும் பிசின்களையும் அகற்றும் கரைப்பானாகவும், ஓர் ஊடகத்தில் நிறமி துகள்களை சிதறடிக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

இருமெத்தில் அடிப்பேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருமெத்தில் எக்சேண்டையோயேட்டு
இனங்காட்டிகள்
627-93-0 Y
ChemSpider 11824
InChI
  • InChI=1S/C8H14O4/c1-11-7(9)5-3-4-6-8(10)12-2/h3-6H2,1-2H3
    Key: UDSFAEKRVUSQDD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12329
  • COC(=O)CCCCC(=O)OC
UNII BY71RX0R62 Y
பண்புகள்
C8H14O4
வாய்ப்பாட்டு எடை 174.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
அடர்த்தி 1.06 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[1]
உருகுநிலை 10.3 °C (50.5 °F; 283.4 K)[1]
கொதிநிலை 227 °C (441 °F; 500 K)[1]
< 1 g/L[1]
பிசுக்குமை 2.5 cP @ 25°செல்சியசு
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 107 °C (225 °F; 380 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

மெத்தனாலுடன் அடிப்பிக் அமிலத்தை எசுத்தராக்கம் செய்வதன் மூலம் இருமெத்தில் அடிப்பேட்டு தயாரிக்கப்படுகிறது. பியூட்டாடையீனை நீரெசுத்தராக்கம் செய்து தயாரித்தல் மற்றும் 1,4-இருமெத்தாக்சி-2-பியூட்டினை கார்பனைலேற்றம் செய்து தயாரித்தல் போன்ற பாரம்பரிய தயாரிப்பு முறைகளும் குறைவான அளவில் இருமெத்தில் அடிப்பேட்டு தயாரிக்கப் பயன்படுகின்றன.[2]

இருமெத்தில் அடிப்பேட்டு செறிவூட்டப்பட்ட அம்மோனியாவுடன் வினைபுரிந்து ஈரமைடு (CH2CH2C(O)NH2)2 சேர்மத்தை கொடுக்கிறது.

நச்சுத்தன்மை தொகு

அடிப்பிக் அமிலத்தின் எசுத்தர்கள் விலங்கு மாதிரிகளில் குறைந்த கடுமையான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த இருமெத்தில் எசுத்தரின் எலிக்கான உயிர்கொல்லும் அளவு 1800 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. 2.0 2.1 2.2 Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
  3. "Dimethyl Adipate". chemicalland21.com.