இருமெத்தில் தெலூரைடு
இருமெத்தில் தெலூரைடு (Dimethyl telluride) என்பது (CH3)2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இது ஆங்கிலத்தில் சுருக்கமாக DMTe.என்றும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
இருமெத்தில்தெலூரியம்[1] (கூட்டுப்பண்பு) | |
வேறு பெயர்கள்
இருமெத்தில் தெலேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
593-80-6 | |
Beilstein Reference
|
1696849 |
ChEBI | CHEBI:4613 |
ChemSpider | 62199 |
EC number | 209-809-5 |
Gmelin Reference
|
1480 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02677 |
ம.பா.த | இருமெத்தில்தெலூரைடு |
பப்கெம் | 68977 |
| |
பண்புகள் | |
C2H6Te | |
வாய்ப்பாட்டு எடை | 157.67 g·mol−1 |
தோற்றம் | வெளிர் மஞ்சள், ஒளிகசியும் திரவம் |
மணம் | பூண்டு |
உருகுநிலை | −10 °C (14 °F; 263 K) |
கொதிநிலை | 82 °C (180 °F; 355 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காட்மியம் தெலூரைடு மற்றும் பாதரச காட்மியம் தெலூரைடு சேர்மங்களில் உலோகக்கரிம ஆவிநிலை மெலொழுங்கு முறையைப் பயன்படுத்தி மேலொழுங்கு வளர்க்கப் பயன்பட்ட முதல் பொருள் இருமெத்தில் தெலூரைடாகும்[2][3]
நுண்ணுயிரி வளர்ச்சிதை மாற்றத்தில் ஒரு விளை பொருளாக இருமெத்தில் தெலூரைடு விளைந்ததை 1939[4] ஆம் ஆண்டு கண்டறிந்தனர். சிலவகையான பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் இருமெத்தில் தெலூரைடை உற்பத்தி செய்கின்றன. ( பெனிசிலியம் பிரிவிகால், பி. கிரைசோகெனம் மற்றும் பெனிசிலியம் நொடேட்டம் மற்றும் சூடோமோனாசு புளோரொசீன்)[5]
இருமெத்தில் தெலூரைடின் நச்சுத்தன்மை குறித்த தகவல்களில் தெளிவில்லை. தெலூரியம் அல்லது அதன் சேர்மங்களில் ஒன்றை உட்கொள்ள நேரிட்டால் உடம்பில் இருமெத்தில் தெலூரைடு உற்பத்தியாகிறது. அழுகிய பூண்டின் நெடி இதனை உணர்த்தும். தெலூரியம் நச்சுத்தன்மை கொண்டது என்பது அறிந்த செய்தியாகும்[6] .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "dimethyl telluride (CHEBI:4613)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. 25 September 2006. IUPAC Names. பார்க்கப்பட்ட நாள் 19 September 2011.
- ↑ Tunnicliffe, J.; Irvine, S. J. C.; Dosser, O. D.; Mullin, J. B. (1984). "A new MOVPE technique for the growth of highly uniform CMT". Journal of Crystal Growth 68 (1): 245–253. doi:10.1016/0022-0248(84)90423-8. Bibcode: 1984JCrGr..68..245T.
- ↑ Singh, H. B.; Sudha, N. (1996). "Organotellurium precursors for metal organic chemical vapour deposition (MOCVD) of mercury cadmium telluride (MCT)". Polyhedron 15 (5–6): 745–763. doi:10.1016/0277-5387(95)00249-X.
- ↑ Bird, M. L.; Challenger, F. (1939). "Formation of organometalloidal and similar compounds by microorganisms. VII. Dimethyl telluride". Journal of the Chemical Society 1939: 163–168. doi:10.1039/JR9390000163.
- ↑ Basnayake, R. S. T.; Bius, J. H.; Akpolat, O. M.; Chasteen, T. G. (2001). "Production of dimethyl telluride and elemental tellurium by bacteria amended with tellurite or tellurate". Applied Organometallic Chemistry 15 (6): 499–510. doi:10.1002/aoc.186.
- ↑ Chasteen, T. G.; Bentley, R. (2003). "Biomethylation of Selenium and Tellurium: Microorganisms and Plants". Chemical Reviews 103 (1): 1–26. doi:10.1021/cr010210. பப்மெட்:12517179.
- Liu, M.; Turner, R. J.; Winstone, T. L.; Saetre, A.; Dyllick-Brenzinger, M.; Jickling, G.; Tari, L. W.; Weiner, J. H.; Taylor, D. E. (2000). "Escherichia coli TehB Requires S-Adenosylmethionine as a Cofactor to Mediate Tellurite Resistance" (pdf). Journal of Bacteriology 182 (22): 6509–6513. doi:10.1128/JB.182.22.6509-6513.2000. பப்மெட்:11053398. பப்மெட் சென்ட்ரல்:94800. http://jb.asm.org/content/182/22/6509.full.pdf. பார்த்த நாள்: 2015-09-07.
- Scott, J. D.; Causley, G. C.; Russell, B. R. (1973). "Vacuum ultraviolet absorption spectra of dimethyl sulfide, dimethyl selenide, and dimethyl telluride". The Journal of Chemical Physics 59 (12): 6577–6586. doi:10.1063/1.1680037. Bibcode: 1973JChPh..59.6577S.
- Gharieb, M. M.; Kierans, M.; Gadd, G. M. (1999). "Transformation and tolerance of tellurite by filamentous fungi: accumulation, reduction, and volatilization". Mycological Research 103 (3): 299–305. doi:10.1017/S0953756298007102. https://archive.org/details/sim_mycological-research_1999-03_103_3/page/299.
வெளி இணைப்புகள்
தொகு- Epichem (Commercial supplier datasheet)