இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு

இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு (Iron tetracarbonyl diiodide) என்பது FeI2(CO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூறில் நான்கு கார்பனைல் ஈந்தணைவிகளும் இரண்டு அயோடைடுகளும் உள்ளன. இச்சேர்மம் பெரசு இரும்பின் குறைந்த சுழல் அணைவுச்சேர்மமாகும். எக்சு கதிர் படிகவியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டபடி, இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு ஒரேபக்க முப்பரிமாண வேதியியலைக் கொண்டுள்ளது.[1] மேலும் கருப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் இருகுளோரோமெத்தேனிலும் தொடர்புடைய கரிம கரைப்பான்களிலும் கரைகிறது.

இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
14911-55-8
ChemSpider 452752
InChI
  • InChI=1S/4CO.Fe.2HI/c4*1-2;;;/h;;;;;2*1H/q;;;;+2;;/p-2
    Key: BNIJVXICMSDYLX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 519026
  • [C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[Fe](I)I
பண்புகள்
C4FeI2O4
வாய்ப்பாட்டு எடை 421.69 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

1940 ஆம் ஆண்டில் ஐபரும் விர்சுங்கும் முதன்முதலில் அறிக்கை செய்த ஒரு செயல்முறையைப் பின்பற்றி, இரும்பு பெண்டாகார்பனைலுடன் மூலக்கூறு அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு தயாரிக்கப்படுகிறது:[2]

Fe(CO)5 + I2 → FeI2(CO)4 + CO

இரும்பு டெட்ராகார்பனைல் ஈரயோடைடு ஒன்று அல்லது இரண்டு CO ஈந்தணைவிகளின் இடப்பெயர்ச்சியுடன் பல்வேறு இலூயிசு காரங்களுடன் வினைபுரிகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Yu. V. Torubayev, A. A. Pasynskii, P. Mathur (2008). Koordinatsionnaya Khimiya 34: 812–816. 
  2. Hieber, W.; Wirsching, A. (1940). "Über Metallcarbonyle. XXXII. Über Eisencarbonylhalogenide". Z. Anorg. Allg. Chem. 245: 35-58. doi:10.1002/zaac.19402450108. 
  3. Li, Bin; Liu, Tianbiao; Popescu, Codrina V.; Bilko, Andrey; Darensbourg, Marcetta Y. (2009). "Synthesis and Mössbauer Characterization of Octahedral Iron(II) Carbonyl Complexes FeI2(CO)3L and FeI2(CO)2L2: Developing Models of the [Fe]-H2ase Active Site". Inorg. Chem. 48 (23): 11283–11289. doi:10.1021/ic9017882. பப்மெட்:19860458.