இருருத்தேனியம் நான்கசிட்டேட்டு குளோரைடு

வேதிச் சேர்மம்

இருருத்தேனியம் நான்கசிட்டேட்டு குளோரைடு (Diruthenium tetraacetate chloride) என்பது {[Ru2(O2CCH3)4]Cl}n என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் இச்சேர்மம் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. ருத்தேனியம் முக்குளோரைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து இருருத்தேனியம் நான்கசிட்டேட்டு குளோரைடு உருவாகிறது.[1] பிணைப்பு வரிசை 2.5 என்ற அளவுள்ள பகுதியளவு உலோக-உலோகப் பிணைப்பு வரிசையைக் கொண்டிருப்பதால் இருருத்தேனியம் நான்கசிட்டேட்டு குளோரைடு கல்வித்துறையில் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளது.[2]

இருருத்தேனியம் நான்கசிட்டேட்டு குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருத்தேனியம்(II,III) அசிட்டேட்டு குளோரைடு
வேறு பெயர்கள்
டெட்ராகிசு(mu-(அசிட்டேட்டோ-O:O'))குளோரோயிருருத்தேனியம்
இனங்காட்டிகள்
38833-34-0 Y
ChemSpider 64886095
EC number 254-144-6
InChI
  • InChI=1S/4C2H4O2.ClH.2Ru/c4*1-2(3)4;;;/h4*1H3,(H,3,4);1H;;/q;;;;;;+1/p-1
    Key: LLHUCACCCSUOKG-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 76871777
  • CC(=O)O.CC(=O)O.CC(=O)O.CC(=O)O.Cl[Ru].[Ru]
பண்புகள்
C8H12ClO8Ru2
வாய்ப்பாட்டு எடை 473.77 g·mol−1
தோற்றம் செம்பழுப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

[Ru2(O2CCH3)4]+ உள்ளகமானது சீன விளக்கு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இக்கட்டமைப்பில் நான்கு அசிடேட்டு ஈந்தணைவிகள் Ru2 மையத்தில் பரவியுள்ளன.[3][4] Ru-Ru பிணைப்புகள் 228 பைக்கோமீட்டர் தொலைவில் [Ru2(O2CCH3)4]+ கூடுகளுடன் குளோரைடு ஈந்தணைவிகளால் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Mitchell, Robert W.; Spencer, Alwyn; Wilkinson, Geoffrey (1973). "Carboxylato-Triphenylphosphine complexes of Ruthenium, Cationic Triphenylphosphine Complexes Derived from Them, and Their Behaviour as homogeneous hydrogenation Catalysts for Alkenes". Journal of the Chemical Society, Dalton Transactions (8): 846. doi:10.1039/DT9730000846. 
  2. Aquino, Manuel A.S. (1998). "Diruthenium and Diosmium Tetracarboxylates: Synthesis, Physical Properties and Applications". Coordination Chemistry Reviews 170: 141–202. doi:10.1016/S0010-8545(97)00079-9. https://archive.org/details/sim_coordination-chemistry-reviews_1998-03_170/page/141. 
  3. Cotton, F.Albert; Kim, Youngmee; Ren, Tong (1993). "Molecular Structure and Magnetic Properties of a Linear Chain Compound, Ru2(O2CCMePh2)4Cl". Polyhedron 12 (6): 607–611. doi:10.1016/S0277-5387(00)84975-X. https://archive.org/details/sim_polyhedron_1993-03_12_6/page/607. 
  4. Martin, Don S.; Newman, Robert A.; Vlasnik, Lynn M. (1980). "Crystal structure and polarized electronic spectra for diruthenium tetraacetate chloride". Inorganic Chemistry 19 (11): 3404–3407. doi:10.1021/ic50213a038. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ic50213a038.