இருவழியொக்கும் பல்லுறுப்புக்கோவை
இயற்கணிதத்தில், குறிப்பற்ற களத்திலமைந்த கெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக்கோவை:
- எனில், இதன் தலைகீழ் பல்லுறுப்புக்கோவை அல்லது இருவழியொக்கும் பல்லுறுப்புக்கோவை அல்லது எதிரொளிக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை (reciprocal polynomial, Palindromic polynomial, reflected polynomial) கீழ்வரும் அமைப்புள்ள பல்லுறுப்புக்கோவையாகும்:[1][2][3]
தலைகீழ் பல்லுறுப்புக்கோவையின் குறியீடு: p∗ அல்லது pR,[2][1]
p∗ இன் கெழுக்கள், எதிர்வரிசையில் அமையும் p இன் கெழுக்களாக இருக்கும். நேர்மாற்றத்தக்க அணியின் சிறப்பியல்பு பல்லுறுப்புக்கோவையாகத் தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் நேரியல் இயற்கணிதத்தில் தோன்றுகின்றன.
கெழுக்களமையும் களமானது சிக்கலெண்களாக இருந்தால் மூலப் பல்லுறுப்புக்கோவை:
- ஆக இருக்கும்.
இதன் இணையிய தலைகீழ் பல்லுறுப்புக்கோவை (conjugate reciprocal polynomial)p† பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
இதில் வரும் ஆனது, இன் இணைச் சிக்கலெண் ஆகும். இப்பல்லுறுப்புக்கோவை சுருக்கமாக தலைகீழ் பல்லுறுப்புக்கோவை எனவும் அழைக்கப்படுகிறது.
பல்லுறுப்புக்கோவை p ஆனது தன்-தலைகீழி (self-reciprocal) அல்லது "இருவழியொத்தது" (palindromic) எனில்:
- p(x) = p∗(x).
மேலும் தன்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையின் கெழுக்கள் பின்வருமாறிருக்கும்:
- ai = an−i (அனைத்து i).
பண்புகள்
தொகுதலைகீழ் பல்லுறுப்புக்கோவைக்கும் அதன் மூலப் பல்லுறுப்புக்கோவைக்கும் பல தொடர்புகள் உள்ளன:
- deg p = deg p∗ ( ).
- p(x) = xnp∗(x−1).[2]
- தலைகீழ் பல்லுறுப்புக்கோவை p∗ இன் மூலமாக α−1 "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை p இன் மூலமாக α இருக்கும்.[4]
- p(x) ≠ x எனில், தலைகீழ் பல்லுறுப்புக்கோவை p∗ குறைக்கவியலாததாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை p ஆனது குறைக்கவியலாப் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[5]
- தலைகீழ் பல்லுறுப்புக்கோவை p∗ தொடக்கநிலை பல்லுறுப்புக்கோவையாக குறைக்கவியலாததாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை p ஆனது தொடக்கநிலை பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[4]
- ஒற்றைப் படியுள்ள தலைகீழ் பல்லுறுப்புக்கோவை x+1 ஆல் வகுபடும். எனவே ஒன்றுக்கு அதிகமான படியுள்ள தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் குறைக்கவியலாதவை.
எதிர்-தலைகீழ் அல்லது எதிர் இருவழியொத்த பல்லுறுப்புக்கோவைகள்
தொகு- என்ற n படியுள்ள பல்லுறுப்புக்கோவை தலைகீழானது எனில்:
- ai = an−i (i = 0, 1, ..., n).
இதேபோல என்ற n படியுள்ள பல்லுறுப்புக்கோவை எதிர்-இருவழியொத்தது எனில்:
- ai = −an−i (i = 0, 1, ..., n). அதாவது
- P(x) = –P∗(x).
எடுத்துக்காட்டு:
ஈருறுப்புக் கெழுக்களின் பண்புகளின்படி,
- n நேர்ம முழுஎண்ணாக இருக்கும்போது, P(x) = (x + 1)n ஒரு தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
- n-இரட்டை முழுஎண்ணாக இருக்கும்போது Q(x) = (x – 1)n தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாகவும், n-ஒற்றை முழுஎண்ணாக இருக்கும்போது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாகவும் இருக்கும்.
பண்புகள்
தொகு- தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவை ஒன்றின் மூலம் a என்றால், 1a யும் அதே மடங்கெண்கொண்ட மற்றொரு மூலமாக இருக்கும்.[6]
- இதன் மறுதலையும் உண்மை: a மூலம் கொண்ட ஒரு பல்லுறுப்புக்கோவைக்கு 1a யும் அதே மடங்கெண்ணுடைய மற்றொரு மூலமாக இருந்தால், அப்பல்லுறுப்புக்கோவையானது, தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழானது.
- q, ஏதாவதொரு பல்லுறுப்புக்கோவை எனில்:
- q + q∗ தலைகீழ் பல்லுறுப்புக்கோவை;
- q − q∗ எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
- இதிலிருந்து எந்தவொரு பல்லுறுப்புக்கோவையையும் (q) பின்வருமாறு எழுதலாம்:
- q = (q + q∗)/2 + (q − q∗)/2.[7]
- இரு தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலனான பல்லுறுப்புக்கோவை தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
- தலைகீழ் மற்றும் எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் இரண்டின் பெருக்கற்பலன் ஒரு எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
- ஒற்றைப் படிகொண்ட எந்தவொரு தலைகீழ் பல்லுறுப்புக்கோவையும் x + 1 ஐக் காரணியாகக் கொண்டிருக்கும் (அதன் மூலம் –1). மேலும் அக்கோவையை x + 1 ஆல் வகுக்கக் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவையும் தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.
- இரட்டைப் படியுடைய எந்தவொரு எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையும் x2 – 1 ஐக் காரணியாகக் கொண்டிருக்கும் (அதன் மூலங்கள் −1, 1). மேலும் அதனை x2 – 1 ஆல் வகுக்கக் கிடைப்பது தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.
- p(x) ஆனது இரட்டையெண் படி 2d கொண்ட தலைகீழ் பல்லுறுப்புக்கோவையெனில், p(x) = xdq(x + 1x) என்பதை நிறைவு செய்யும் d படியுள்ள மற்றொரு பல்லுறுப்புக்கோவை q இருக்கும்[8]
மெய்யெண் கெழுக்கள்
தொகுகெழுக்களை மெய்யெண்களாகக் கொண்டதொரு பல்லுறுப்புக்கோவையின் சிக்கலெண் மூலங்கள் எல்லாம் சிக்கலெண் தளத்திலமைந்த ஓரலகு வட்டத்தின் மீதமையுமானால், அப்பல்லுறுப்புக்கோவை தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[9]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 *Graham, Ronald; Knuth, Donald E.; Patashnik, Oren (1994). Concrete mathematics : a foundation for computer science (Second ed.). Reading, Mass: Addison-Wesley. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0201558029.
- ↑ 2.0 2.1 2.2 Aigner, Martin (2007). A course in enumeration. Berlin New York: Springer. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540390329.
- ↑ Roman 1995, pg.37
- ↑ 4.0 4.1 Pless 1990, pg. 57
- ↑ Roman 1995, pg. 37
- ↑ Pless 1990, pg. 57 for the palindromic case only
- ↑ Stein, Jonathan Y. (2000), Digital Signal Processing: A Computer Science Perspective, Wiley Interscience, p. 384, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471295464
- ↑ Durand 1961
- ↑ Markovsky, Ivan; Rao, Shodhan (2008). "Palindromic polynomials, time-reversible systems, and conserved quantities". 2008 16th Mediterranean Conference on Control and Automation (PDF). pp. 125–130. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/MED.2008.4602018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4244-2504-4. S2CID 14122451.
{{cite book}}
:|journal=
ignored (help)
மேற்கோள்கள்
தொகு- Pless, Vera (1990), Introduction to the Theory of Error Correcting Codes (2nd ed.), New York: Wiley-Interscience, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-61884-5
- Roman, Steven (1995), Field Theory, New York: Springer-Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-94408-7
- Durand, Émile (1961), "Masson et Cie: XV - polynômes dont les coefficients sont symétriques ou antisymétriques", Solutions numériques des équations algrébriques, vol. I, pp. 140–141
வெளியிணைப்புகள்
தொகு- "The Fundamental Theorem for Palindromic Polynomials". MathPages.com.
- Reciprocal Polynomial (on MathWorld)