இரே மண்டலம், ஈரான்
இரே மண்டலம் (Ray County; பாரசீக மொழி: شهرستان ری) என்பது ஈரானில் உள்ள தெகுரான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆட்சி மண்டலமாகும் . இந்த மண்டலத்தின் தலைநகரம் இரே நகரம் ஆகும். இது உண்மையில் தெகுரானின் ஒரு பகுதியாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 71,711 குடும்பங்களில், மாவட்டத்தின் மக்கள் தொகை 292,016 ஆகும். இந்த மண்டலம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய மாவட்டம், பாஷாபூயே மாவட்டம், கஹ்ரிசாக் மாவட்டம் மற்றும் காலே நவ் மாவட்டம் . அந்த 4 மண்டலம் மூன்று நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: ஹசனாபாத், கஹ்ரிசாக் மற்றும் பாகர்ஷஹர் என்பன ஆகும்.
இரே மண்டலம்
شهرستان ری Ray County | |
---|---|
மண்டலம் | |
தெகுரான் மாகாணத்தின் மண்டலங்கள் | |
ஈரானில் தெகுரான் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 35°23′N 51°20′E / 35.383°N 51.333°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | தெகுரான் |
தலைநகரம் | இரே, ஈரான் |
பாக்சு (மாவட்டங்கள்) | நடு மாவட்டம், பசாபுயே மாவட்டம், காகுரிராக் மாவட்டம், காலே நவ் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,205.1 km2 (851.4 sq mi) |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 3,49,700 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈசீநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (ஈரானிய கோடை நேரம்) |
இரே மண்டலம், ஈரான் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம். |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
2006 | 2,97,711 | — |
2011 | 3,19,305 | +7.3% |
2016 | 3,49,700 | +9.5% |
amar.org.ir |
பெயரிடல் மரபு
தொகுஈரானியன் சம்பர் சொசைட்டியின் கூற்றுப்படி, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளின் சரியான ஒலிப்பு முறையானது, "அ" என்ற உயிரெழுத்தின் ஒலிப்புப் போல என்றாலும், " ரே " என்றாலும், எழுத்துப்பிழையும், ஒலிப்புப்பிழையும் உள்ள மாறுபாடாக உள்ள சொற்களும் பயன்பாட்டில் உள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா ஈரானிகாவைப் போலவே, நகரப் பல்கலைக் கழகமும் "ரே" ("ஆசாத் பல்கலைக்கழகம், இரே") என்ற எழுத்துப்பிழைகளையும் பயன்படுத்துகின்றன. இதன் முழுமையான வரலாற்றுப் பெயர், சாகர்-இ ரே என்பதாகும்.
விளக்கம்
தொகுஈரானின் நில ஆட்சியானது, பல்வேறு அரசுப் பணிகளுக்காகவும், அரசு சார்பற்ற நிறுவனங்களின் அல்லது அமைப்புகளின் மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைச் செயற்படுத்தவும், உள்ளாட்சி அமைப்பு முறைகளைச் செயற்படுத்தவும், பல்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் படியாக, 1,648,195 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட ஈரானின் நிலப்பரப்பானது, வரலாற்று அடிப்படையில், அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தால், முதல் நிலையாக, ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் நாள், இந்த ஐந்து நிலப்பகுதிகளுக்கான ஆட்சித் தொகுப்பு அறிவிப்பு வெளியானது.[2] ஒவ்வொரு பகுதியும், தன்னகத்தே பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்த இரண்டாம் நிலை உட்பிரிவின் பெயர் மாகாணம் என்று அழைக்கப்படுகிறது. ஈரான் அரசின் புள்ளிவிவரப்படி, இந்நாள் வரை முப்பத்தியொரு மாகாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாகாணமும், அடுத்து மண்டலம் என்று அழைக்கப்படும், மூன்றாம் நிலை, நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அடுத்து நான்காம் நிலை ஆட்சிப்படியாக, ஒவ்வொரு மண்டலமும், சில மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. சில நகரங்களையும் ஊரகங்களையும் (கிராமப்புற மாவட்டம்) உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. கிராமப்புற மாவட்டங்கள் என்பது பல கிராமங்களின் தொகுப்பாகும். மண்டலத்தில் இருக்கும் சில நகரங்களில் ஒரு நகரமே, அம்மண்டலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டு செயற்படுகிறது.
சுற்றுலா
தொகுகெசுமெக்-அலி இரே என்பது சுற்றுலா இடங்களில் முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இங்குள்ள நீருற்று பழம் பெருமை வாய்ந்த பொழுது போக்கு இடமாகும். இது தெற்கு தெகுரான் நகரத்திற்கும், வடக்கு இரே, ஈரான் ஊருக்கும் அருகில் இருக்கிறது. இந்நீருற்று துர்குல் கோபுரம், இரக்சன் கோட்டை, இன்னும் சில சுற்றுலா இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீரில் தாது உப்பு கலந்துள்ளதால், பல வருடங்களுக்கு முன், ஈரானியர் தரை விரிப்புகளைச் சுத்தம் செய்ய இந்த நீருற்றைப் பயன்படுத்தினர். இந்நீரால் அவ்விரிப்புகள் அடர் நிறத்தை இழந்து, அழகிய வெளிர் நிறங்களுக்கு மாற்றுவதற்கு பயன்படுத்தினர். முற்காலத்தில் தரைகீழ் அமைந்துள்ள நீருற்றாலும், ஒரு வகை மண்ணாலும், சிவப்பு, அடர்கருப்பு, பழுப்பு நிற சுடுமண் பாண்டங்கள் செய்யப்பட்டன. இது போன்ற பாண்டங்களை 1934-1936 ஆம் ஆண்டு பிலடோப்பியா பல்கலைக்கழகம் அகழாய்வில் கண்டறிந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "National census 2016". amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.[]
- ↑ "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.