இர. வாசுதேவன்

தமிழ் எழுத்தாளர்

இரத்தினசாமி வாசுதேவன் அல்லது முனைவர் இர. வாசுதேவன் என்பவர் தமிழ்நாட்டில் நன்கறியப்பட்ட தமிழ் மருத்துவ இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது ஆய்வு தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஆகும். பண்டைய தமிழ் மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் இவர் செய்து வருகிறார்.

இர. வாசுதேவன்
கல்விB.Litt., M.A., M.Phil
பணிமருத்துவ ஆய்வு
சமயம்இந்து
வலைத்தளம்
www.thamizhkkuil.net
இர வாசுதேவன் ஏட்டுச் சுவடிகளுடன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம், கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர் வே. இரத்தினசாமி. தாயாரின் பெயர் சின்னப்பெண். பாடசாலைக் கல்வியை கிராமத்தில் 8ம் வகுப்பு வரை கற்றிருந்தார். 1967ல் சென்னைக்கு சென்றார். அங்கே கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார். அத்துடன் தன்னால் விடுபட்ட பாடசாலைக் கல்வியை பொது நூலகங்களில் கற்றார். தமிழ் இலக்கியங்களில் நாட்டம் கொண்டார். இருபத்தொன்பாவது வயதில் இந்திய ரிசர்வ வங்கி, சென்னை கிளையில் பகுதி நேரப் பணியாளராகப் பணி புரிந்தார். சுமார் 8 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி, தமிழ் மன்றத்தின் செயலாளராக இருந்து வருகிறார். அம்மன்றத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக நிகழ்கிறது, நண்பகல் சொற்பொழிவு. அது எந்த தொய்வும் இல்லாமல், புதன்கிழமை தோறும் நடைபெறுகிறது.

கல்வியும் ஆய்வும்

தொகு

எட்டாம் வகுப்புடன் நின்றுவிட்ட தனது பாடசாலைக் கல்வியை, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து B.Litt., M.A., பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் M.Phil பயின்று ‘திருவிளையாடற் புராணத்தில் கலைக் கூறுகள்’ என்னும் ஆய்வேட்டினை அளித்தார். மீண்டும் சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஆய்வு செய்து, தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்னும் அரிய ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். 1987 முதல் 2002 வரை தொடர்ந்து கல்வி கற்றார். தனது கல்வியைத் தமிழ்வழிக் கல்வியாகவே கற்றார். ஓய்வு நேரத்தைப் படிப்பதற்காகவும் தமிழ்ப் பணி புரிவதிலும் ஈடுபடுத்திக்கொண்டார்.

தமிழ்ப் பணி

தொகு

தமிழரின் பழமையான சுவடிகளையும் நூல்களையும் தேடிச் சேகரிக்கும் பணியில் தமிழர் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தமிழ் குயில் எனும் ஒலியாடல் குழுமத்தை நிறுவி, அதன்மூலம் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறார். இதுவரை 350 - க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மறைந்திருக்கும் அரிய சுவடிகளைத் தேடும் பணியின் ஊடாக, கிடைக்கும் சுவடி நூல்களை நகலெடுத்து கணினியில் சேமித்து, அரசு மின்நூலகத்தில் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார்.

வெளியிடப்பட்ட நூல்கள்

தொகு
  • தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
  • விண்ணும் மண்ணும்
  • தமிழ் இலக்கணம்
  • திருமந்திரம்
  • இயற்கை மருத்துவம்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._வாசுதேவன்&oldid=3364037" இலிருந்து மீள்விக்கப்பட்டது