இறம்பொடை அருவி
(இறம்பொடை நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இறம்பொடை நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி- நுவரெலியா பெருந்தெருவில் இறம்பொடை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான இறம்பொடை ஆற்றில் அமைந்துள்ளது. மொத்தம் 109 மீட்டர் (358 அடி) உயரத்தில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்து பார்வையிட முடியும். மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வரண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. நீர் வீழ்ச்சி கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.
இறம்பொடை நீர்வீழ்ச்சி | |
---|---|
![]() இறம்பொடை நீர்வீழ்ச்சி | |
அமைவிடம் | ![]() |
ஏற்றம் | 1187 மீட்டர் |
மொத்த உயரம் | 109 மீட்டர் (358 அடி) |
நீர்வழி | இறம்பொடை ஆறு (மகாவலி கங்கை) |