இலங்கையின் இதழியல் வரலாறு

இலங்கையின் இதழியல் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை தொடக்கமாய்க் கொண்டது. 1802 ஆம் ஆண்டில் "த கவர்மென்ட் கெசற்" என்ற ஆங்கில வார இதழினை இலங்கையின் ஆள்பதி நிர்வாகம் வெளியிட்டது. அரச அறிவித்தல்கள், அரசு விளம்பரங்களைக் கொண்ட வர்த்தமானிப் பத்திரிகையாகவே இது அமைந்தது.

இலங்கையின் சுதந்திர இதழியல்

தொகு

கோல்புறூக் சிபார்சுகளில் காணப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டித் தம் அதிருப்தியை வெளிகாட்டும் வகையில் கொழும்பு வாழ் ஆங்கில வர்த்தகர் குழுவியால் 1834 இல் வெளியிடப்பட்ட "Observer and commercial advetiser" எனும் இதழே இலங்கையில் வெளிவந்த முதலாவது சுதந்திர இதழாகும். ஜோர்ச் வின்டர் இதன் முதல் ஆசிரியராயிருந்தார். இவ்விதழே தற்போது லேக் ஹவுஸ் (Lake House) நிறுவனத்தால் வெளியிடப்படும் The Ceylon observer, Sunday Obsrver ஆகிய இதழ்களின் முன்னோடி இதழ்களாகும்.

1836 ஆம் ஆண்டு "The Colombo Journal" எனும் ஆங்கில இதழ் ஆள்பதி சேர் ரோபேர்ட் வில்மட் கோட்டலின் அவர்களின் நிருவாகத்தில் அரச அச்சகத்தில் மூலம் வெளியிடப்பட்டது. ஜோர்ச் லீ இதன் ஆசிரியராயிருந்தார். 'ஓப்சேவர்' இதழ் மூலம் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட அதிருப்திக்கு எதிர்க் குரலாக இது வெளிவந்தது. சிறிது காலத்தில் நின்று விட்டது. அதன் தொடர்ச்சி போல ஆள்பதி நிருவாகத்தின் அனுசரனையுடன் 1837 இல் "Ceylon Chronicle" ஆங்கில வார இதழ் வெளிவந்தது. 1838 இல் இதுவும் நின்று போய் விட்டது.

இலங்கையின் சுதேசிய இதழியல்

தொகு

அமெரிக்க மிஷனரி யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து 1841 சனவரியில் உதயதாரகை Mornig Star என தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இரு இதழ்களை வெளியிட்டது. இவையே முதலில் வெளிவந்த சுதேசிய இதழ்களாகக் கொள்ளக்கூடியவை. இவை சமயப் பிரசாரத்தையே நோக்காகக் கொண்டமைந்தன.

1864 இல்ரொபேர்ட் நியூட்டன் 'Lanka Guardian' எனும் ஆங்கில இதழினை கொழும்பிலிருந்து வெளியிட்டார்.1913 இல் சேர்.பொன்.இராமநாதனின் அனுசரனையில் "சிலோனிஸ்" என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது.

சுதேச இதழியல் நிறுவனங்கள்

தொகு
  • 1918 இல் டி.ஆர்.விஜயவர்த்தன " Daily News" நாளிதழை ஆரம்பித்தார். 1923 இல் "Ceylon Observer" நாளிதழையும், தொடர்ந்து "தினமின" சிங்கள நாளிதழையும் விலைக்கு வாங்கினார். அவர் உருவாக்கிய "Associated News papers of Ceylon Limited" நிறுவனமே இலங்கையின் முதலாவது இதழ் வெளியீட்டு நிறுவனமாகும்.

ஆதாரம்

தொகு

அருளானந்தம் க, 'இலங்கையின் இதழியலின் வரவாறும் மதிப்பீடும்'(2003),இலங்கை.