இலங்கையில் சாதி அமைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, பாரளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்ற வற்றுக்கு சாதி சார்பான இட ஒதுக்கீடுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. எனினும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பை தம்மகத்தே கொண்டிருக்கின்றன. தமிழரிடையேயான சாதியமைப்பு பிரதேச வேற்றுமையைக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகள் தமக்கே உரிய சாதியமைப்பைக் கொண்டுள்ளன.
இலங்கைத் தமிழரின் சாதி அமைப்பு
தொகுயாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு
தொகுமுதன்மைக் கட்டுரைகள்: யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, சாதிப்பட்டியல்
யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.
சிங்களவரிடையான சாதி அமைப்பு
தொகுமுதன்மைக் கட்டுரை: சாதிப்பட்டியல்
சிங்களவரிடயான சாதி அமைப்பை, மலைநாட்டு சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.