இலங்கையில் தமிழருக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

இலங்கையில் தமிழருக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தீவின் நீண்டகால இனப் பிரச்சினையின் போது பரவலாக இடம்பெற்றன. முதல் நிகழ்வாக 1958 கலவரத்தின் போது தமிழ்ப் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டமை பதியப்பட்டுள்ளது.[1] 1960களில் யாழ்ப்பாணத்தில் படைத்துறையினரின் குவிக்கப்பட்ட காலத்தில் தமிழ்ப் பெண்கள் பலர் வன்முறைக்குட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்தன.[2]

இலங்கையில் தமிழருக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
இடம்இலங்கை
நாள்1958-2020
தாக்கியோர்இலங்கை ஆயுதப் படைகள், இந்திய அமைதி காக்கும் படை, சிங்களக் கும்பல், ஊர்காவற் படை, காவல்துறை, சிறப்பு செயற்படைப் பிரிவு

1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களின் போது தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் கும்பல்களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர்.[3][4][5]

1983 இல் ஈழப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களைத் தண்டிக்கும் வகையில்,[6][7] பாலியல் வன்முறைகள் சிங்கள ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.[8] குழந்தைகள் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு தமிழ் பெண்கள் மற்றும் ஆண்களென இருபாலாரும் குறிவைக்கப்பட்டனர்.[9][10][11] தமிழர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்த ஏனைய குழுக்களில் இந்திய அமைதி காக்கும் படை, ஊர்காவற் படையினர், காவல்துறையினர், துணை ராணுவ குழுக்கள் ஆகியன அடங்கும்.[12][13]

ஈழப்போரின் போது இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைப் படையினரால் அடிக்கடி பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிமைத்தனத்திற்கு இலக்காகியுள்ளனர்.[14]

குற்றவாளிகளிடமிருந்து மிரட்டல், குற்றத்திற்கான தண்டனை, பழமைவாத ஈழத்தமிழ் சமூகத்தில் அதனுடன் பின்னிப்பிணைந்திருந்த கடுமையான நற்பெயர்க்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மோதலின் போது பல பாலியல் வன்முறைகள் பதிவு செய்யப்படவில்லை.[note 1][16][17]

2009-இல் ஈழப்போரின் முடிவில் பாலியல் அடிமைத்தனம் மற்றும் அரசுப் படைகளின் பரந்த அளவிலான பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன. போருக்குப் பிந்தைய காலத்திலும் இது தொடர்ந்தது, மனித உரிமைகள் குழுக்கள் இதை ‘ஒழுங்குபடுத்தட்ட வன்முறைகள்’ என்று வர்ணித்தன.[note 2][19]

பரந்த அளவிலான வன்புணர்வுக் குற்றச்சாட்டுகளை அரசாங்கப் படைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. 2010 ஆம் ஆண்டில் ஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்வருமாறு கூறினார்:

"அவர்களின் பயிற்சி முழுவதும், எங்கள் சிறுவர்கள் புலிகளை வெறுக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள், புலிகளை அவர்கள் வெறுக்கத்தக்க விலங்குகளாகவும், வாழத் தகுதியற்றவர்களாகவுமே பார்க்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்று 200 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். அவர்களை வெறுத்தால் அவர்கள் ஏன் அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறார்கள்?"[20]

குறிப்புகள் தொகு

  1. "பன்னாட்டு மன்னிப்பு அவை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல பாலியல் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரால் தங்கள் மீது நடத்தப்பட்ட குற்றங்களைப் பற்றி பல பெண்கள் சாட்சியம் அளிக்கத் தயங்குவதால், இந்தச் சாட்சியங்கள் மனித உரிமை மீறல்களின் பரவலான வடிவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று மன்னிப்பு அவை நம்புகிறது. மன்னிப்பு அவைக்கு புகாரளிக்கப்பட்ட இந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தனர். இருப்பினும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் நீதிக்கு கொண்டுவரப்பட்ட பாதுகாப்புப் படையின் எந்தவொரு உறுப்பினரையும் இந்த அமைப்பு அறியவில்லை."[15]
  2. "தமிழ் மக்களை அடிபணியச் செய்ய இலங்கைப் படையினர் முறையான பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை முறைகளைப் பயன்படுத்துகின்றனர்... வன்புணர்வு இலங்கையில் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது."[18]

மேற்கோள்கள் தொகு

  1. Emergency '58: The story of the Ceylon race riots (1959), Tarzie Vittachi – Andre Deutsch
  2. Neil De Votta – Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka, p127
  3. Sansoni Commission Report, 1980. https://lankafreelibrary.com/2019/10/15/sansoni-commission-1980/
  4. Brian Eads – The Cover Up That Failed – The Prohibited Report From Colombo, London Observer – 20 September 1981
  5. E.M. Thornton & Niththyananthan, R. – Sri Lanka, Island of Terror – An Indictment, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 9510073 0 0), 1984, Appendix A
  6. Katherine W. Bogen, April 2016, Rape and Sexual Violence: Questionable Inevitability and Moral Responsibility in Armed Conflict, Scholarly Undergraduate Research Journal at Clark, Volume 2
  7. Human Rights Watch - “We Will Teach You a Lesson” Sexual Violence against Tamils by Sri Lankan Security Forces (2013) https://www.hrw.org/report/2013/02/26/we-will-teach-you-lesson/sexual-violence-against-tamils-sri-lankan-security-forces p4
  8. Sri Lanka – Ethnic Composition of the Armed Forces http://www.country-data.com/cgi-bin/query/r-13282.html
  9. Höglund, K. Testimony Under Threat: Women’s Voices and the Pursuit of Justice in Post-War Sri Lanka. Hum Rights Rev 20, 361–382 (2019). https://doi.org/10.1007/s12142-019-0549-3
  10. Amnesty International, January 2002, SRI LANKA Rape in custody, AI Index: ASA 37/001/2002 p.3
  11. Sexual Violence Against Tamil Women, D. B. S. Jeyaraj, July 8, 2001
  12. Amnesty International on human rights violations before and after the Indo-Sri Lanka accord – Tamil Times, June 1988, p6-7
  13. University Teachers for Human Rights (Jaffna) Sri Lanka, Special Report No. 31, 28th October 2008 – Pawns of an Un-heroic War https://web.archive.org/web/20151029153843/http://www.uthr.org/SpecialReports/spreport31.htm
  14. Journalists for democracy in Sri Lanka, 1 April 2015, Trevor Grant, Among the walking dead of India's refugee camps http://www.jdslanka.org/index.php/news-features/human-rights/524-among-the-walking-dead-of-indias-refugee-camps
  15. Amnesty International, August 1996 – SRI LANKA Wavering commitment to human rights, p19
  16. Amnesty International, August 1996 – SRI LANKA Wavering commitment to human rights, p9, 27
  17. University Teachers of Human Rights (Jaffna), The Broken Palmyra, chapter 5 – "NO MORE TEARS SISTER" THE EXPERIENCES OF WOMEN, War of October 1987 http://www.uthr.org/BP/volume2/Chapter5.htm
  18. Asian Human Rights Commission (AHRC), 12 January 2000, Crime Against Humanity: Systematic Detention, Torture, Rape and Murder as Weapon of War in Sri Lanka (AHRC UA Index 000112)
  19. BBC News, 9 November 2013, Frances Harrison, 'Tamils still being raped and tortured' in Sri Lanka https://www.bbc.com/news/world-asia-24849699
  20. Mohan, Rohini (2016). "The Fear of Rape: Tamil Women and Wartime Sexual Violence". in Jayawardena, K; Pinto-Jayawardena, K (in English). The Search for Justice: The Sri Lankan Papers. Zubaan Series on Sexual Violence and Impunity in South Asia. New Delhi: Zubaan. பக். 237–295.