இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்

(இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள் ரூபாய் 5, ரூபாய் 10, ரூபாய் 50, ரூபாய் 100, ரூபாய் 200, ரூபாய் 500, ரூபாய் 1000, ரூபாய் 2000 ஆகியனவாகும். ரூபாய் 5 நாணயத்தாள் மிகவும் அருகிவிட்டது. இலங்கையில் முதற்தடவையாக 5000 ரூபாய் நாணயத்தாளையும், புதிய நாணயத்தாள் தொடரையும் 2011, பெப்ரவரி 4 இல் இலங்கை மத்திய வங்கி வெளியிடுவதற்கு அட்டவணையிட்டுள்ளது.

இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்
50-ரூபாய் தாள்
ஐ.எசு.ஓ 4217
குறிLKR (எண்ணியல்: 144)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுRs அல்லது ₨
மதிப்பு
துணை அலகு
 1/100சதம்
வங்கித்தாள்ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1000, ரூ. 2000, ரூ5000
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
25, 50 சதம், ரூ. 1, ரூ. 2, ரூ. 5
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 2, 5, 10 சதம்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)இலங்கை
வெளியீடு
நடுவண் வங்கிஇலங்கை மத்திய வங்கி
 இணையதளம்www.cbsl.lk
அச்சடிப்பவர்De la Rue Lanka Currency and Securities Print (Pvt) Ltd
 இணையதளம்www.delarue.com
காசாலைரோயல் மிண்ட்
 இணையதளம்www.royalmint.com

நாணயத்தாள்களின் பண்புகள் தொகு

இலங்கையில் பெப்ரவரி 4ம் திகதி வெளிவரவுள்ள 5000, 1000, 500, 100, 50, 20 ரூபாய் நாணயத்தாள் தொடர்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக் கலைஞர்கள் என்ற தொனிப்பொருளையும் இலங்கையில் காணப்படக்கூடிய பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றையும் முக்கியப் பண்புகளாகக் கொண்டுள்ளது.

நீர்வரி அடையாளம் தொகு

ஒவ்வொரு நாணயத்தாளினதும் நீர்வரி அடையாளமாக வெவ்வேறுபட்ட உள்ளூர் பறவைகளின் தோற்றம் காணப்படுவதுடன், இதே பறவையே தாளிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெறுமதி தெளிவான நீர்வரி அடையாளமாக இலக்கங்களில் நிலைக்குத்தாகக் காணப்படுகின்றது.

மேலதிகமான சிறிய எழுத்துரை தொகு

மிக நெருக்கமாகப் பார்க்கும்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் பெறுமதி என்பவற்றை பார்க்கக்கூடியதாயிருக்கும்.

பாதுகாப்பு நூல் தொகு

பாதுகாப்பு நூல்கள் நாணயத்தாள் ஒவ்வொன்றிற்குமிடையில் வேறுபடுகின்றதுடன், இ. ம. வங்கி என்ற எழுத்துக்களும் பெறுமதியும் அதில் காணப்படுகின்றன. உதாரணம்: ரூ. 20, ரூ. 100.

சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றமடைகின்ற விதத்தில் யன்னல் வடிவில் காணப்படும் ஸ்டார் குறோமின் அகலம் ரூ. 5,000, ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நாணயத்தாள்களில் முறையே 3. மி.மீ, 2.5 மி.மீ, 2 மி.மீ ஆகக் காணப்படுகின்றது. ரூ.100, ரூ.50 மற்றும் ரூ. 20 தாள்களிலுள்ள நூலானது நாணயத்தாள்களில் பதிக்கப்பட்டிருக்கிறது.

மூலைக் கல் தொகு

மூலைக்கல் நீர்வரி அடையாளமானது நாணயத்தாளின் ஒவ்வொரு மூலைகளிலுமுள்ள மூலை விட்டச் சட்டங்களின் வடிவில் காணப்படுகிறது.

வெளிச்சத்தினூடாகப் பார்த்தல் தொகு

தாளினை வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது தாளின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் உள்ள பெறுமதி இலக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கச்சிதமக பொருந்துவதைக் காணமுடியும்.

மேலதிகமான சிறிய எழுத்துரை தொகு

மிக நெருக்கமாகப் பார்க்கும்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் பெறுமதி என்பவற்றை பார்க்கக்கூடியதாயிருக்கும்.

பார்வையற்றவர்களும் அறியக்கூடிய பண்பு தொகு

பார்வை பாதிக்கப்பட்டவர்களும் நாணயத்தாளின் பெறுமதியினைத் தெரிந்துகொள்ள உதவும் விதத்தில் நாணயத்தாளின் இடது பக்கத்தில் காணப்படும் நாணயத்தாளின் பெறுமதிக்கேற்ப அதிகரித்துச் செல்லும் விதத்தில் நெருக்கமான முறையில் புள்ளிகள் நிலைக்குத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. (ரூ.20 நாணயத் தாளுக்கு ஒரு புள்ளி என்ற அடிப்படையில்)

மேற்கிளம்பிய அச்சிடல் பரப்பு தொகு

தாளின் குறுக்குப் பக்கமாக விரல்களை ஓட்டுவதன் மூலம் மேற்கிளம்பிய அச்சிடல் பகுதியொன்றை உணரமுடியும். (உதாரணம்: மத்திய வங்கியின் பெயர், தொட்டறியக்கூடிய நாடா வடிவிலான ஒரு பகுதி, மத்தியிலுள்ள பிம்பம் போன்றன.)

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு