இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (சிங்களம்: ශ්රීලංකා උසස් තාක්ෂණ අධ්යපන ආයතනය, Sri Lanka Institute of Advanced Technological Education(SLIATE)) என்பது இலங்கையில் காணப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னணியில் திகழும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகவும், உயர்கல்விக்கு மாற்றீடான கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம். உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இருக்கின்ற ஓர் அமைப்பின் மூலம் இந்நிறுவனம் தொழிற்படுகின்றது. இந்நிறுவனம் தற்போது, இலக்கம் 12, டீ.பி.ஜெயாமாவத்த, கொழும்பு 10 என்ற முகவரியுடைய கட்டடத்தில் இயங்குகின்றது.
1995 ஆம் ஆண்டு இலங்கைப் நாடாளுமன்ற சட்டம் இலக்கம் 29 இன்படி இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டாரநாயக்கா குமாரத்துங்க மற்றும் பிரதி உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர். விஸ்வவர்ண பாலா அவர்களாலும் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கான துறைசார்ந்த நிபுணத்துவ கல்வியை, தொழில்வழங்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைப்பதன் மூலம் இந்நிறுவனம் வழங்குகின்றது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொதுப்பணிப்பாளர் தொழிற்படுவார். தற்போது கலாநிதி. டபிள்யூ .கிலாரி.ஈ. சில்வா என்பவர் இதன் பொதுப்பணிப்பாளராகத் தொழிற்படுகின்றார்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறைந்தது ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனம் என்ற முறையில் தற்போது 14 உயர் கல்வி நிறுவனங்களும், 7 உயர் கல்வி பகுதி நிறுவனங்களும் இருக்கின்றன. தற்போது 14 வகையான உயர் தேசிய திப்ளோமா (எச்.என்.டி) கல்வித் தகைமைகளைக் கொண்ட துறைகளை, இந்த 18 நிறுவனங்களிலும் தேவைகளின் அடிப்படையிலும், வளங்களின் தன்மைக்கும் ஏதுவாகவும் நடாத்துகின்றது. கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம், விவசாயம், வியாபாரக்கற்கைகள், பொறியியல், ஆங்கிலம், உணவுத் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணிய அளவையியல் மற்றும் விருந்தோம்பலும் சுற்றுலாத்துறை முகாமைத்துவமும் போன்ற பல்வேறுபட்ட துறைகளை, காலத்திற்கு ஏற்ற இற்றைப்படுத்தலுடன் இது நடாத்திக்கொண்டிருக்கின்றது.
இலங்கையிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள்
- அம்பாறை – காடி உயர்தொழில்நுட்ப நிறுவனம் [1][2]
- பதுளை உயர்தொழில்நுட்ப நிறுவனம் [3][4]
- தெகிவளை உயர்தொழில்நுட்ப நிறுவனம்
- காலி உயர்தொழில்நுட்ப நிறுவனம்
- கம்பகா உயர்தொழில்நுட்ப நிறுவனம்
- யாழ்ப்பாண உயர்தொழில்நுட்ப நிறுவனம் பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம்
- கண்டி உயர்தொழில்நுட்ப நிறுவனம் [5]
- கேகாலை உயர்தொழில்நுட்ப நிறுவனம்
- குருநாகல் உயர்தொழில்நுட்ப நிறுவனம் [6]
- கொழும்பு உயர்தொழில்நுட்ப நிறுவனம் I[7][8]
- மட்டக்களப்பு உயர்தொழிநுட்ப நிறுவனம்
- திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனம்
இலங்கையிலுள்ள உயர் கல்வி பகுதி நிறுவனங்கள்
- அனுராதபுரம் உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
- இரத்தினபுரி உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
- சம்மாந்துறை உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
- தங்காலை உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
- வவுனியா உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
- நாவலப்பிட்டி உயர்தொழில்நுட்ப பகுதி நிறுவனம்
வெளியிணைப்புக்கள்
தொகு- ↑ Ampara ATI Location
- ↑ "Area". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ Badulla ATI Website
- ↑ "HND Helps". Archived from the original on 2013-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "ATI Website". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ "ATI Website". Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ "ATI Students transfer to Colombo (Mattakkuliya) ATI ". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ Colombo (Mattakkuliya) ATI HNDE Application