இலங்கை உருளிப் பாம்பு

இலங்கை உருளிப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிலிண்ட்ரோபிலிடே
பேரினம்:
சிலிண்ட்ரோபிசு
இனம்:
சி. மேக்குலேடசு
இருசொற் பெயரீடு
சிலிண்ட்ரோபிசு மேக்குலேடசு
லின்னேயஸ், 1758

இலங்கை உருளிப் பாம்பு (சிலிண்ட்ரோபிசு மேக்குலேடசு) என்பது இலங்கையில் உள்ள சிலிண்ட்ரோபிடே குடும்பத்தில்[2] உள்ள ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[3] இது 1000 மீற்றர் வரையான சமவெளிகளிலிருந்து அறியப்படுகிறது, மத்திய மலைப்பகுதியில் கம்பளை, பேராதனை, கண்டி, பல்லேகலை, மற்றும் எலகெரா மற்றும் தீவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நிக்கவெரட்டிய ஆகியவை உள்ளடங்கும்.

சிங்களத்தில் தெபத் நயா (depath naya) மற்றும் வடஉல்லா (wataulla) என அழைக்கப்படும் இது இலங்கையால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட முதல் ஊர்வனவாம். உடலின் பின்பகுதியைத் தட்டையாக்குவது மற்றும் உடலின் பின்புறம் மற்றும் வால் முன்னோக்கிச் சுருட்டுவது இதன் பாதுகாப்பு அம்சமாகும். இந்த செயலின் போது தலை பொதுவாக உடலின் கீழ் மறைக்கப்படுகிறது.

விளக்கம்

தொகு

சி. மாகுலேடசு பின்புறத்தில் இரண்டு பெரிய சிவப்பு-பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. இவை கருப்பு வலையமைப்பால் சூழப்பட்டுள்ளன. வயிறு வெள்ளை, கருப்பு நிறத்தில் இருக்கும்.

முதுகு செதில்கள் மென்மையானவை, 19 அல்லது 21 வரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும். வயிற்றுச் செதில்கள் 189-212 வரை, அடுத்தடுத்த முதுகு செதில்களை விட இரண்டு மடங்கு பெரியவை; குத செதில் பிரிக்கப்பட்டுள்ளது; வாலடி செதில்கள் 4 முதல் 6 வரை காணப்படும்.

முதிர்வடைந்த பாம்புகள் 35 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[4]

சூழலியல்

தொகு

புதைந்து வாழக்கூடிய இரவு நேரப் பாம்பு இதுவாகும். இது கற்களுக்கு அடியிலும், அழுகும் மரக்கட்டைகளிலும், பாறைகளுக்கு நடுவிலும், பகலில் இலைக் குப்பைகளிலும் தங்கி, இரவில் வெளிப்பட்டு, டுமெரிலின் குக்ரி பாம்பு, போயின் கரடுமுரடான பாம்பு, ட்ரெவல்யனின் மண் பாம்பு, குந்தர் பாம்பு போன்ற மற்ற பாம்புகளை உணவாக உண்ணுகின்றன. இப்பாம்பின் உணவாக மண்புழுக்கள் மற்றும் பூச்சிகளும் உள்ளன.

இனப்பெருக்கம்

தொகு

உள்பொரி முட்டை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இப்பாம்புகள் 105-191 மிமீ நீளமுள்ள 1 முதல் 15 குஞ்சுகளை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wickramasinghe, L.J.M.; Wickramasinghe, N. (2021). "Cylindrophis maculatus". IUCN Red List of Threatened Species 2021: e.T197197A123312002. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T197197A123312002.en. https://www.iucnredlist.org/species/197197/123312002. பார்த்த நாள்: 13 August 2023. 
  2. "Cylindrophis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 August 2007.
  3. Cylindrophis at the Reptarium.cz Reptile Database. Accessed 17 August 2007
  4. Boulenger, G.A. 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume I. London. pp. 136-137
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_உருளிப்_பாம்பு&oldid=3840142" இலிருந்து மீள்விக்கப்பட்டது