இலங்கை தகைவிலான்

பறவை வகை
இலங்கை தில்லான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
செக்ரோபிசு
இனம்:
செ. கைபிரைத்ரா
இருசொற் பெயரீடு
செக்ரோபிசு கைபிரைத்ரா
(பிளைத், 1849)
வேறு பெயர்கள் [2]

செக்ரோபிசு தாவுரிகா கைபிரைத்ரா
கிருண்டோ தாவுரிகா கைபிரைத்ரா

இலங்கை தகைவிலான் (Sri Lanka swallow)(செக்ரோபிசு கைபிரைத்ரா) என்பது இலங்கையில் வசிக்கும் ஒரு பறவைச் சிற்றினமாகும். இது செம்பிட்டத் தில்லானுடன் நெருங்கிய தொடர்புடையது. முன்னர் செம்பிட்டுத் தில்லானின் துணையினமாகக் கருதப்பட்டது.

விளக்கம்

தொகு

இலங்கை தகைவிலான் பெரிய அளவிலானது. இதன் வால் நன்கு பிளவுபட்டிருக்கும். மேலும் அடிப்புறம் ஆழ்ந்த செந்திறமாகவும் எந்த அடையாளமும் இல்லாமல் கடற்நீல நிற தொடையுடன் காணப்படும். இது இந்த சிற்றினத்தின் தனித்துவமான அம்சமாகும். இதன் செந்நிற அடிப்பகுதியானது, செம்பிட்டத் தில்லானின் இதை வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம். இது ஒரு குருவி சிற்றினமாகும். இதன் காலில் மூன்று விரல்கள் முன்னோக்கியும், ஒன்று பின்னோக்கியும் காணப்படும்.[3]

வாழிடம்

தொகு

இலங்கை தகைவிலான் இலங்கையின் தாழ் நிலங்கள், மலையடிவாரங்கள், பண்ணை வயல்கள், மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் திறந்தவெளி வாழ்விடங்களிலும் காணப்படுகிறது.[3]

நடத்தை

தொகு

இது பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய குழுக்களாக வாழ்கிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Cecropis hyperythra". IUCN Red List of Threatened Species 2017: e.T103812653A112878901. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103812653A112878901.en. https://www.iucnredlist.org/species/103812653/112878901. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Cecropis hyperythra on Avibase
  3. 3.0 3.1 3.2 "Sri Lanka Swallow - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.

மேலும் காண்க

தொகு
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia. The Ripley guide. Volume 2: attributes and status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_தகைவிலான்&oldid=3527783" இலிருந்து மீள்விக்கப்பட்டது