இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை
யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை இந்திய நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
மாமனிதர் விருதுதொகு
மறைந்த நடராஜா ரவிராஜூக்கு நவம்பர் 11, 2006 அன்று தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது.[1]
ரவிராஜின் இறுதி நேர்காணல்தொகு
ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார்[2].
கொழும்பில் பாரிய கண்டனப் பேரணிதொகு
ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை நவம்பர் 13, 2006 நடைபெற்ற பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணியில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த அரசியல், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்[3].
இவற்றையும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புக்கள்தொகு
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை - பிபிசி (தமிழ்)
- நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொலை - பிபிசி - (தமிழ்)
- Sri Lankan MP killed in Colombo - பிபிசி - (ஆங்கிலம்)
- ரவிராஜ் சுட்டுக்கொலை - தமிழ்நெட் - (ஆங்கிலம்)
- Scotland Yard may probe SL MP killing - இந்துஸ்தான் ரைம்ஸ் - (ஆங்கிலம்)
- த.தே.கூ. நாடளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை
- Tragic demise of Nadarajah Raviraj in Colombo
- யாழில் ரவிராஜின் புகழுடலுடலுக்கு அஞ்சலி
- ரவிராஜின் புகழுடல் தீயுடன் சங்கமம்
- Jaffna bids farewell to slain MP, relatives reveal assassination attempt
- Many eye-witnesses saw Raviraj being murdered D.B.S.Jeyaraj
- Raviraj killing: Separate confessions by two suspects (Daily News 05/01/2008)