இலட்சுமணன் கோடு


இலட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி ஆனந்த இராமாணயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: அதாவது சீதை ஆசைப்பட்டு கேட்ட புள்ளி மானை துரத்திக் கொண்டு வெகு தூரம் சென்ற ராமரின் குரல் போல ஓர் குரல் கேட்டதும், இலக்குமணனை அவ்விடத்திற்கு சென்று பார்த்து வருமாறு சீதை அனுப்புகிறாள். ஆனால் இலக்குமணன் அது ராமரின் குரல் இல்லை என்று எவ்வளவு கூறியும், அதைக் கேட்காமல் சீதை அவனை கடிந்து பேசுகிறாள், அதனால் ராமனை தேடி புறப்பட ஆயத்தமான இலட்சுமணன், தன்னுடைய வில்லின் நுனியினால், தரையில் மூன்று கோடுகளைக் கிழித்து, “எக் காரணம் கொண்டும் இவற்றை தாண்ட வேண்டாம்” என்று சீதையிடம் கூறிச் செல்கிறான். இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்த போது, அவனுக்கு பிட்சை இட சீதை அந்த கோட்டை தாண்டிய போதுதான், இராவணனால் கவரபட்டாள் என்று ஆனந்த ராமாயணம் கூறுகிறது.

இராவணன் துறவி உடையில் சீதையை அனுகும் காட்சி

வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவரில் ஒருவர் கூட இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் இலட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி இவ்வாறு இடம் பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமணன்_கோடு&oldid=4132411" இலிருந்து மீள்விக்கப்பட்டது